மணமேடையில் மணமகனின் நண்பர் கொடுத்த பரிசு- முகம் சுழித்த மணமகள்! வைரல் வீடியோ
இன்றைய கால திருமணத்தில், பல கேளி கிண்டல்களும், அசம்பாவித சம்பவங்களும் நடைப்பெறுவதை இணைய வழியாக காண்பதுண்டு.
திருமணத்தின்போது மணமகளுக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம்.
அந்தவகையில், வட இந்தியாவை நடைபெற்ற திருமண வரவேற்பு ஒன்றில், மணமகன் மற்றும் மணமகள் இருவரும் திருமண மேடையில் நின்றுகொண்டிருக்க, மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர் மணமகளுக்கு பரிசு கொடுப்பதற்காக மேடைக்கு வருகிறார்.
மேடைக்கு வந்த அவர், கிப்ட் கவர் சுற்றப்பட்ட பார்சலை ஒவொன்றாக பிரித்து, இறுதியில் பால் பாட்டில் ஒன்றை எடுத்து மணமகள் முன்பு நீட்ட, அதனை பார்த்த மணமகள் சட்டென முகத்தை திருப்பிக்கொண்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், சமீபத்தில் மணமகனின் நண்பர்கள் பால் பாட்டிலை பரிசாக கொடுக்க, மணமகள் அதனை மேடையிலையே தூக்கி வீசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானதும் குறிப்பிடத்தக்கது.