மணமகனின் கழுத்தில் ஏறி மிதித்த மணமகள்... இப்படியும் ஒரு கூத்தா?
திருமணத்தில் போட்டோஷுட் என்ற பெயரில் மணமக்கள் செய்யும் செயல்கள் நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
இங்கு மணப்பெண் ஒருவர் தனது காலை மணமகனின் கழுத்தில் வைத்து போட்டோஷுட் செய்துள்ளார். குறித்த காட்சியில் 'யே கர்கே திகாவோ...' என்ற இந்தி பாடலுக்கு, பல வித அசத்தலான ஸ்டண்டுகளை செய்கிறார்.
இதை பார்க்கும் போது நமக்கு இவர் கீழே விழுந்து விடுவாரோ என பயம் பற்றிக்கொள்கிறது. ஆனால் அவர் மிக கூலாக இருக்கிறார். இதற்கிடையில் மணமகள் தனது இடுப்பில் கை வைத்து நடனமாடுவது போலவும் ஷூட் செய்கிறார்.
இந்த முழு போட்டோ ஷூட்டின் போது, மணமகன், மணமகளின் பேலன்ஸ் போய்விடக்கூடாது என்பதற்காக, மணமகளின் கால்களை கையால் பிடித்தபடி நிற்பதை காண முடிகின்றது.
இப்படியே மிகவும் பாதுகாப்பான முறையில் ஸ்டண்ட் செய்துகொண்டே போட்டோஷூட் செய்துவிட்டு மணப்பெண் கீழே இறங்குகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |