தாலியுடன் பரிதாபமாக நின்ற மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! காரணம் என்ன?
திருமணம் ஒன்றில் பெண் ஒருவருக்கு மணமகன் தாலி கட்டும் தருணத்தில் அப்பெண் தாலியை தனது கையால் தடுத்து திருமணத்தை நிறுத்தியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
கர்நாடகா மாநிலம் ஹோசதுர்காவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உறவினர்கள் குறித்த பெண்ணை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
ஆனால் அங்கே சுற்றி கெஞ்சிய உறவினர்கள் யாரையும் கண்டுகொள்ளாத மணப்பெண் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.
மணமகன் கையில் தாலியுடன் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். ஆனால் குறித்த ஜோடிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாம்.
ஆனால் அப்பொழுது எதுவும் கூறாத மணப்பெண் தற்போது தனது மேல் படிப்பிற்காக திருமணத்தை நிறுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
ஆனால் அப்பொழுது எதுவும் கூறாத மணப்பெண் தற்போது தனது மேல் படிப்பிற்காக திருமணத்தை நிறுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |