மணப்பெண்ணின் முன்னாள் காதலர் கொடுத்த பரிசு! திறந்த போது பலியான மாப்பிள்ளை
கடந்த வாரம் திருமணமான தம்பதிகள் தங்களுக்கு வந்த பரிசுப்பொருளை பிரித்த போது மாப்பிள்ளையும் அவரது அண்ணனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
முன்னாள் காதலர் கொடுத்த பரிசு
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரத்தில் பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்பொழுது திருமணத்திற்கு அதிகமான பரிசுப்பொருட்களும் வந்துள்ளது.
அப்பொழுது பெயர் குறிப்பிடப்படாமல் ஹோம் தியேட்டர் ஒன்று பரிசாக வந்துள்ளதையடுத்து, திருமணம் முடிந்து ஒருவாரம் கழித்து மாப்பிள்ளையும், அவரது அண்ணனும் மகிழ்ச்சியில் அதனை வீட்டில் பொருத்தியுள்ளனர்.
சரியாக எல்லாவற்றையும் பொருத்திவிட்டு, ஹோம்தியேட்டரை ஆன் செய்துள்ளனர். அப்பொழுது உள்ளே இருந்த பாம் வெடித்து புதுமாப்பிள்ளை சம்பள இடத்திலேயே பலியாகியுள்ளார்.
அவரது அண்ணன் மருததுவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார். இதுமட்டுமின்றி குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிசாரின் விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மணப்பெண் திருமணத்திற்கு முன்பு சர்ஜு மார்க்கம் என்பவரைக் காதலித்ததும், நெருங்கி பழகியதும், பின்பு அவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்று தெரிந்ததும் அவரை விட்டு விலகியுள்ளார்.
ஆனால் காதலர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த நிலையில், பெண்ணிற்கு ஹேமேந்திரா என்பவருடன் நிச்சயம் நடைபெற்று கடந்த 31ம் தேதி திருமணமும் நடைபெற்றுள்ளது.
பெண்ணை பழிவாங்க நினைத்த முன்னாள் காதலர், ஹோம் தியேட்டர் ஒன்றினை பரிசாக கொடுத்ததும், அதனுள் வெடிகுண்டு செட் செய்து வைத்ததும் அம்பலமாகியுள்ளது.
பொலிசார் குறித்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் வெடிகுண்டு நிபுணராக வேலை செய்து வருவதாகவும், குறித்த ஹோம் தியேட்டரில் 2 கிலோ வெடிமருந்தை நிரப்பி பரிசாக கொடுத்ததும் தெரியவந்துள்ளது.