5 நிமிடத்தில் திருமணம்! விஷமருந்திய ஜோடிகள்... நடந்தது என்ன?
திருமண நிகழ்வில் தாலிகட்ட 5 நிமிடத்திற்கு முன்பு விஷம் குடித்த ஜோடிகளால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தன்று விஷம் அருந்திய ஜோடி
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 21 வயது நபருக்கும், 20 வயது பெண்ணிற்கும் கடந்த செவ்வாய்கிழமை அன்று கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் திருமணத்தன்று இருவரும் விஷம் அருந்தி இருவரும் மயங்கிய நிலையில், உறவினர்கள் குறித்த ஜோடிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதில் மணமகன் உயிரிழந்த நிலையில், மணமகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விசாரணையில் பகீர் தகவல்
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்த நிலையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், திருமணம் நடப்பதற்கு முன்பு, மணமகன் திருமணத்தை இரண்டு ஆண்டுகள் தள்ளி போடக்கூறியுள்ளார்.
ஆனால் மணப்பெண் இதற்கு சம்மதிக்காமல் உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதோடு, காவல்நிலையம் வரை சென்று புகாரும் அளித்துள்ளார்.
இந்நிலையில் மணமகன் வேறுவழியின்றி திருமணத்திற்கு அரை மனதுடன் சம்மதம் தெரிவித்துவிட்டு, விரக்தியில் காணப்பட்டுள்ளார்.
ஆதலால் திருமணத்தன்று விஷம் அருந்தி தற்கொலை செய்ய உள்ளதை மணப்பெண்ணிடம் கூறியதால், அவரும் விஷயத்தை அறிந்து விஷத்தை குடித்துள்ளார்.
தற்போது மணமகன் உயிரிழந்த நிலையில், மணப்பெண் மட்டும் உயிருக்கு போராடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணமகன் மீது கோபமான மணமகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் மணமகன் வேறுவழி இன்றி உடனடியாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் விரக்தியில் இருந்த மணமகன் விஷம் குடித்துள்ளார். இதனை மணமகன், மணமகளிடம் கூறியதை அடுத்து அவரும் விஷம் குடித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.