மணப்பெண்ணிற்கு போடப்பட்ட மேக்கப்! திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை
மணப்பெண்ணிற்கு போடப்பட்ட மேக்கப்பினால் அவரது முகம் விகாரமாக மாறியதையடுத்து திருமணத்தை மாப்பிள்ளையே நிறுத்தியுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
பார்லர் சென்ற மணப்பெண்
கர்நடாக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே என்ற கிராமத்தில் கவிதா என்ற பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திருமண மேக்கப்பிற்கு பியூட்டி பார்லர் சென்றுள்ளார்.
அப்பொழுது ஸ்டீம் சிகிச்சை எடுத்த அவரது முகம் கறுத்துவிட்டதுடன், வீங்கவும் செய்துள்ளது. இதனால் மணமகன் திருமணத்தையே நிறுத்தியுள்ளது பெண் வீட்டினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், புதுமையான ஒன்றினை முயற்சிக்க சென்று இப்படியொரு துயரம் ஏற்பட்டுள்ளதுடன், திருமணம் நின்றுபோனது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறித்த பியூட்டி பார்லரின் உரிமையாளர் கங்கா என்பவர் மீது பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில், கவிதாவை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.