அடிக்கடி பயப்படுவது நோயா? உங்களுக்கும் இருக்கலாம்.. அறிகுறிகள் இதோ!
நம்மிள் சிலர் எந்தவித காரணமும் இல்லாமல் எல்லா விடயங்களுக்கும் பயம் கொள்வார்கள்.
ஆனால் அவர்களுக்கு வரும் பயம் இயல்பானதாக இருக்காது. அச்ச உணர்வு என்பது பொதுவானதாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒன்றைப் பார்த்து பயந்து கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
இதனை “ஃபோபியா” என்றும் அழைப்பார்கள். ஆனால் இந்த ஃபோபியா பயம் போல் அல்லாமல் அதீதமான அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
ஃபோபியா நோய் நம்மில் பலருக்கும் நம்மையே அறியாமல் ஏற்படும். இது பயத்தினால் இதயத்தையே உறைய வைக்கிறது.
அந்த வகையில், ஃபோபியா நோய் பற்றிய மேலதிக விவரங்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
போபியாவின் வகைகள்
- அக்ரோஃபோபியா (Acrophobia)- உயரமான இடங்களை பார்த்தால் ஒருவிதமான பயம் வரும். இதனால் அந்த உயரமான இடங்களுக்கு சிலர் செல்லமாட்டார்கள்.
- கிளஸ்ட்ரோஃபோபியா (Claustrophobia) – சிலருக்கு மூடப்பட்ட அல்லது குறுகிய இடங்களில் இருப்பதற்கான பயம் இருக்கும்.
- அரோஃபோபியா (Aerophobia) – வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்கும் ஆனால் சிலருக்கு விமானப் பயணத்திற்கு செல்ல பயமாக இருக்கும்.
- சைனோஃபோபியா (Cynophobia) – நாய்கள் போன்ற பிராணிகளை பார்த்தால் சிலருக்கு பயம் இருக்கும். ஏனெனின் அவர்கள் அப்பிராணிகள் கடிக்கும் அல்லது அழுக்காக இருக்கும் என்பார்கள்.
- ஜெனோஃபோபியா (Xenophobia) – அன்னியர் அல்லது வெளிநாட்டு மக்களை பார்த்தால் வெறுப்பு ஏற்படும். சிலருக்கு அவர்களை பார்த்தால் பயமாக இருக்கும்.
அச்சக் கோளாறுகள்
உண்மையில் எந்தவொரு ஆபத்து இல்லாத போது ஒரு பொருள் மற்றும் இடத்தை பார்த்து பயம் வந்தால் அது தான் அச்சக் கோளாறுகள் எனப்படும்.
இது போன்று மன அழுத்தம் காரணமாக ஏற்படுவது இயற்கையாக பார்க்கப்பட்டாலும், சாதாரண நேரங்களில் அதே அச்சம் ஏற்பட்டால் அது நோய் நிலைமையின் அறிகுறியாகும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த அச்ச கோளாறு பிரச்சனை உங்களது அன்றாட வாழ்க்கையில் ஒரு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக விலங்குகள், பூச்சிகள், ஊசி, உயரம் , பொது மக்கள் மத்தியில் பேசும் போது, மற்றும் மக்கள் கூட்டமாக உள்ள இடம் பார்க்கும் பொழுது உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் பயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஒரு இந்திய ஆய்வுக் கட்டுரையின் படி, பயம் (அச்சக் கோளாறுகள்) என்பது 4.2% மக்களுக்கு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அறிகுறிகள்
1. எந்தவித காரணமும் இல்லாமல் தலைச்சுற்றல் அல்லது மயக்கம் அடைவது போன்று தோன்றினால் பயம் தொடர்பான பிரச்சினையாக இருக்கலாம்.
2. சிலருக்கு எந்தவொரு பொருள் அல்லது இடத்தை பார்த்தால் தன்னை அறியாமல் பயம் வரும். அப்போது இதய துடிப்பு அதிகரிக்கும்.
3. இரவு நேரங்களில் ஏதாவது கனவு அல்லது உருவம் ஏதாவது கண்டுவிட்டால் விழுங்குவதில் சிரமம் மற்றும் சுவாதித்தலில் சிரமம் ஏற்படும்.
4. ஒரு இடத்தில் நிற்கும் பொழுது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அதிகமாக வியர்த்தல்.
5. மார்பில் வலி ஏற்படும். ஆனால் அது எதனால் ஏற்படுகிறது என அறிந்துக் கொள்ள முடியாமல் இருக்கும்.
6. குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.
7. ஏதாவது ஒரு இடத்தை பார்த்து பயந்து விட்டால் உடல் நடுங்க ஆரம்பிக்கும்.
8. உடலில் எந்தவொரு உணர்வும் இல்லாதது போன்று தோன்றுதல்.
9. சுற்றுச் சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு இழப்பு ஏற்படும். ஏனெனின் நீங்கள் மற்றவர்களை பார்த்து பயம் கொள்ளும் பொழுது உங்களால் என்ன நடக்கிறது என்பதனை தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தீவிரமடைந்தால் பதற்ற கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள்
1. விமான பயணம் அல்லது பொது மக்கள் மத்தியில் பேசும் போது ஏற்பட்ட மோசமான அனுபவம், லிப்ட்டில் சிக்கி கொண்ட போது, குழந்தை பருவத்தில் ஏற்பட்ட நாய்க்கடி, அருகில் நிகழ்த்த விபத்தில் ஏற்பட்ட மரணம் உள்ளிட்ட காரணங்களால் நோய் நிலைமை ஏற்படலாம்.
2. குடும்பத்தினரிடத்தில் இது போன்ற பயம் இருந்தால் மரபணு காரணமாக பழக வாய்ப்புள்ளது.
3. மன அழுத்தம் அல்லது பதற்ற கோளாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்ச கோளாறு பிரச்சினை வரும்.
சிகிச்சை
ஒரு பொருள் அல்லது சூழ்நிலைகளின் காரணமாக அச்சக் கோளாறு ஏற்பட்டால் அது பற்றி குறித்த நபரிடம் பேச வேண்டும்.
குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது நண்பர்கள் பாதிக்கப்பட்டவர் என்ன நினைக்கிறார் என்பதனை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
யோகா, தியானம் மற்றும் சுவாச கட்டுப்பாடு போன்ற தளர்வு உத்திகள் தொடர்ந்து செய்து வந்தால் மனம் அமைதியடையும். உடலுக்கும் எந்தவித தாக்கமும் ஏற்படாது.
நீங்கள் தொழில்முறை உதவியை பெற விரும்பினால், உங்கள் மருத்துவரை அணுகலாம். அச்சக் கோளாறு நோய் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதன் தீவிர தன்மையை அடையாளம் கண்டுவிட்டால் மருத்துவர்கள் சிகிச்சைக் கொடுக்க இலகுவாக இருக்கும்.
படிப்படியாக பயத்தை எதிர்கொண்டு சிந்தனையில் மாற்றம் கொண்டு வரக்கூடிய ஆலோசனை வழங்க வேண்டும்.
பயத்துடன் கூடிய பதற்ற கோளாறு பிரச்சனைக்கு சிகிச்சையளிக்கக்கூடிய மருந்துவில்லைகளை வாங்கி குடிக்க வேண்டும். அதே போன்று ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
அச்சக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுடன் மேற்கொள்ளப்படும் குழு சிகிச்சை முறையை தெரிந்து கொண்டு அதில் கவனம் செலுத்தலாம்.
அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை
ஃபோபியா குறைக்க உதவும் உணவுகள்
1. மெலட்டோனின் மற்றும் செரோட்டோனின் அதிகரிக்கும் உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அதிகமான பழங்கள் சாப்பிடலாம். இது மனநலம் தொடர்பான ஹார்மோன்கள் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. உதாரணமாக வாழைப்பழம், கிவி, அன்னாசி, சாப்போட்டா
2. ஓமேகா-3 கொழுப்புச்சத்து நிறைந்த இறைச்சிகள் மற்றும் உணவுகள் வாங்கி சாப்பிடலாம். இது உடலுக்கு நன்மையளிப்பதுடன் பயம் என்ற நோயில் இருந்து நம்மை வெளியில் கொண்டு வரும். ஓமேகா-3 கொழுப்புச்சத்து சால்மன் மீனில் உள்ளது.
3. சியா விதைகள் சாப்பிடலாம். இதிலிருக்கும் ஊட்டசத்துக்கள் பயத்தை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது.
4 மக்னீசியம், பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை, பசலைக் கீரை, அவல் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
5. முளைக்கட்டிய பயறு சாப்பிடலாம். இது நரம்புகளுக்கு தேவையான சக்தியை தரும்.
6. பச்சை தேநீர் மற்றும் டீ உடலை ஓய்வுபடுத்தி தூக்கத்தைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். பயம் வரும் பொழுது இது போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
