கல்யாணமா முக்கியம்... நமக்கு சாப்பாடு தான் முக்கியம்! மணப்பெண்செய்த தரமான சம்பவம்
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் பல வித்தியாசமான காணொளிகள் வைரல் ஆகி வருகின்றது. தற்போது திருமண கோலத்தில் பெண் ஒருவரின் காட்சி வைரலாகி வருகின்றது.
இந்தியாவில் தெரு உணவுகளில் ஒன்றான பானி பூரி பெரும்பாலான நபர்களை அடிமையாக்கி வைத்துள்ளது என்றே கூறலாம். இதனை சாப்பிட இன்றும் மக்கள் கடைகளில் வரிசை கட்டியும் நின்று வருகின்றனர்.
இங்கு காணொளி ஒன்றில் திருமண சடங்குகள் முடிந்ததும் மணப்பெண்ணும், மணமகனும் சுவையான இந்த பானி பூரியை ருசிப்பதைக் காண முடிகின்றது.
திருமண சடங்குகள் அப்போதுதான் முடிந்துள்ள நிலையில், அவர்களது பசியையும் புரிந்துகொள்ள முடிகின்றது. பானி பூரி வழங்கப்பட்டவுடன், மணப்பெண் தன் கணவரிடம் “இது கோதுமை பூரி... எனக்கு இது வேண்டாம்” என்று கூறுகிறார்.
தனது கணவர் பானி பூரியை சாப்பிடும் வரை மணப்பெண் காத்திருக்கிறார். மணப்பெண்ணின் இனிமையான இந்த செல்லக் கோபம் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. சிறிது நேரம் கழித்து, அவர் ரவையாலான பூரியை ருசிக்கிறார்.