என்னது திருமண விருந்து சாப்பிட ரூபாய் 7300 கட்டணமா? கொடுமையின் உச்சத்தின் பின்னணி இதோ
திருமண விருந்தில் விருந்து சாப்பிட்ட தம்பதிகள் தலா ரூ7300 கட்ட வேண்டும் என திருமண தம்பதிகள் போட்ட கண்டிஷன் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணலாம்
திருமணம் என்றால் முக்கியமான விஷயம் விருந்து தான். திருமண வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் விருந்தை எதிர்பார்த்து தான் வருவார்கள். இந்த விருந்து பழக்கம் உலகம் முழுவதும் உள்ள எல்லா கலாச்சாரத்திலும் பொதுவான விஷயமாக இருக்கிறது. திருமணம் என்றால் கட்டாயம் விருந்து இருக்கும். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் விருந்திற்கான காசை விருந்தினர்களிடமே வசூலித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
சமீபத்தில் பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து ரெட்டிட் தளத்தில் பேசினார். அதில் அவர் "எனக்கு எனது தோழியின் திருமணத்திற்காக அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் திருமணத்திற்கு வழங்கப்படும் விருந்திற்கு விருந்தினர்களாக வருபவர்கள் 99 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ7300) வழங்க வேண்டும் அப்பொது தான் அவர்கள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என போடப்பட்டிருந்தது.
பொது வாக திருமணத்தில் ஒரு பெட்டி வைக்கப்படும் அதில் விருந்தினர்கள் திருமண தம்பதி ஹனி மூனை கொண்டாட அதில் அன்பளிப்புகளை வழங்குவார்கள். ஆனால் என் தோழி அவர் திருமணம் செய்யப்போகும் நபருடன் ஏற்கனவே குடும்பம் நடத்தி 3 குழந்தைகளை பெற்ற நிலையில் தற்போது திருமணம் செய்கிறார்.
அதனால் அவருக்கு ஹனிமூன் எல்லாம் தேவைப்படாது. அதனால் இப்படி ஒரு யுக்தியை யோசித்துள்ளார். இந்த திருமணத்திற்கு நான் செல்வதாக இல்லை. நான் வரமுடியாது என பதில் எழுதியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. தன் திருமண விருந்திற்கு விருந்தினர்களிடமே பணம் வசூலித்த தம்பதி குறித்த செய்தி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்