குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க
குளிர்காலத்தில் ஏற்படும் சுவாச நோயில் மூச்சுவிடுவதற்கு சிரமம் ஏற்படும். இதனால் அவதிப்படுகிறவர்களுக்கு ஏற்ற பாட்டி வைத்தியத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் சுவாச பிரச்சனை
குளிர் காலம் வந்துவிட்டாலே பலருக்கும் உடல்நல பிரச்சனையும் வந்துவிடுகின்றது. அதாவது நுரையீரல் தொற்று, சுவாச கோளாறு உள்ளவர்கள் அதிகமாக சிரமப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கஷ்டப்படுவதுடன், சுவாசிக்கவும் சிரமப்படுகின்றனர். அவ்வாறு சிரமத்தை சந்திப்பவர்களுக்கு ஏற்ப பாட்டி வைத்தியத்தினை தெரிந்து கொள்ளலாம்.

பாட்டி வைத்தியம் என்ன?
இருமல், சளி, ஆஸ்துமா, மூச்சு குழாய் அழற்சி இவற்றிற்கு சிறந்த மருந்தாக மஞ்சள் பயன்படுகின்றது. வெதுவெதுப்பான பாலில் மஞ்சள், மிளகு கலந்து குடித்தால் நல்ல பலனை பெறலாம். இத்துடன் இஞ்சியும் சேர்த்துக் கொள்ளலாம்.
தேன் இயற்கையில் கிருமி நாசினியாக உள்ள நிலையில், இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. ஒரு கப் வெதுவெதுப்பான நீர் அல்லது தேநீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
வீட்டில் இருந்தவாறு நீராவி பிடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். கொதிக்கும் தண்ணீரை வைத்து அதிலிருந்து ஆவியை பத்து நிமிடம் வாய்வழியாக சுவாசிக்க வேண்டும்.

குளிர் காலத்தில் உடல் நீர்ச்சத்து அதிகமாக இருக்க வேண்டும். ஆதலால் தண்ணீர் பருகுவது, மூலிகை தேநீர் அல்லது பழச்சாறு இவற்றினை எடுத்துக் கொள்ளவும்.
ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்ற குளிர்ந்த உணவுகளை தவிர்த்து சூடான உணவுகள், மூலிகை டீ இவற்றினை குடிப்பது நல்லது.
டீ தூள், புதினா, துளசி, உடைத்த மிளகு, இஞ்சி ரோஜா இதழ் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் தொண்டை சளி, கரபரப்பு நல்ல தீர்வு கிடைக்கும்.
வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு வெந்நீரில் கல் உப்பு போட்டு தினமும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

காலை நேரத்தில் இஞ்சி டீ மதியம் சுக்கு பால், இரவில் சூடான மஞ்சள் பால், மிளகு பணங்கற்கண்டு சேர்த்து பருகவும். வெளியில் சென்றுவிட்டு வந்த பின்று சூடான தண்ணீரில் மஞ்சள் பொடி சேர்த்து கை மற்றும் கால்கள் கழுவ வேண்டும்.
குளிர் காலத்தில் சருமத்திற்கு வறட்சி, பூச்சை தாக்குதல் அதிகமாக இருக்கும் என்பதால் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும். குளிப்பதற்கு வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தவும்.

தோல் நீக்கிய இஞ்சி, லவங்கம், துளசி மற்றும் கற்பூரவல்லி இலை, மிளகு ஏலக்காய், இடித்த பூண்டு, பெருஞ்சீரகம், ஓமம், சீரகம் போன்றவற்றினை 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பருகினால் நுரையீரல் செயல்பாடு சீராவதுடன், சுவாச கோளாறுகளும் சரியாகிவிடும்.
ஓமம், மஞ்சள் தூள், மூன்று துளி நீலகிரி தைலத்தை சேர்த்து ஐந்து நிமிடம் நீராவி பிடித்தால் மார்பு, நாசிப் பகுதிகள் விரிவடைந்து சளி வெளியேறுவதுடன், விரைவில் நிவாரணம் பெறலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |