இரவு செய்த இட்லி இன்னும் மீதி இருக்கா? அப்போ மணக்க மணக்க இந்த ரெசிபி செய்து பாருங்க
பொதுவாக காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பாடு செய்வது என இல்லத்தரசிகள் குழப்பமாக இருப்பார்கள்.
மேலும் அன்றைய நாளை துவங்குவதற்கு காலையுணவு மிக முக்கியமானது என்பதால் அது குறித்து சிந்தித்து கொண்டிருப்பார்கள்.
இப்படியான நேரங்களில் இரவு அவித்த இட்லி மீகுதியாக இருந்தால் அதை வைத்து சுவையான இட்லி உப்புமா செய்யலாம். இதனை நிச்சயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் குழந்தைகளுக்கு பிடித்தமான இட்லி உப்புமா எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
இட்லி உப்புமா
தேவையான பொருட்கள்:
- இட்லி - 10
- பெரிய வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் பொடி - அரை சிட்டிகை
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் தேவையான இட்லிகளை எடுத்து அதனை உதிர்த்து தனியாக வைத்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை போட்டு நன்றாக வாசம் வரும் வதக்கவும்.
வதங்கிய தாளிப்புடன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு கிளறி விடவும்.
இப்போது உதிர்த்து தனியாக வைத்திருக்கும் இட்லியை போட்டு கிளறவும்.
கிளறிக் கொண்டே தேவையான உப்பு சேர்த்து சரியாக 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கினால் சுவையான இட்லி உப்புமா தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |