வீட மணக்கும் சுவையில் பிரட் மஞ்சூரியன் செய்ய தெரியுமா? ஈஸியான டிப்ஸ் இதோ!
பொதுவாக விடுமுறை நாட்கள் வரும் போது வித விதமாக சமைத்து சாப்பிட வேண்டும் என நினைப்போம்.
அந்த வகையில் காலை, மதியம் என என்ன வித்தியாசமாக சாப்பிட்டாலும் மாலை நேரங்களில் டீயுடன் ஸ்நாக்ஸ் ஏதாவது சமைத்து சாப்பிடும் பழக்கம் இருக்கின்றதே அது எல்லாவற்றிலும் மேல் என்று தான் கூற வேண்டும்.
குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது அவர்களுக்கு சாப்பாட்டை விட ஸ்நாக்ஸ் அதிகமாக கொடுப்பார்கள்.
ஏனென்றால் ஸ்நாக்ஸ் என்றால் அவர்களை எப்படியாவது சாப்பிட வைத்து விடலாம்.
இது போன்ற சூழ்நிலையில் வீட்டில் அந்த பொருள் இல்லையே, இந்த பொருள் இல்லையே என கவலை கொள்ளாமல் வீட்டிலுள்ள காய்கறிகளை வைத்து கூட சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம்.
அந்த வகையில் வீட்டிலுள்ள பொருட்களை பயன்படுத்தி பிரட் மஞ்சூரியன் எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* பிரட் - 5 துண்டுகள்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மைதா - 1/4 கப்
* சோள மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெஙகாயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* க்ரீன் சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கையளவு
பிரட் மஞ்சூரியன் தயாரிப்பது எப்படி?
முதலில் தேவையானளவு பிரட் துண்டுகளை சதுர வடிவில் வெட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலில் மைதா, சோள மாவு, உப்பு, மிளகுத் தூள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நீர் போல் கலந்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து பிரட் துண்டுகளை கலவையில் போட்டு பிரட்டி கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அது சிறிதளவு எண்ணெய் விட்டு பிரட்டை அதில் போட்டு மொறுமொறுவென ப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும்.
பிரட்டை எடுத்து ஒரு புறமாக வைத்து விட்டு அந்த வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கி கொண்டிருக்கும் போது கலவையுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி கெட்சப், சர்க்கரை, உப்பு, வினிகரை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
கடைசியாக கொஞ்மாக தண்ணீர் சேர்த்து கிளறவும். சோளமாவை கலந்து கொஞ்சம் நேரம் கொதிக்க விட்ட பின்னர் பிரட் துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பிரட் மஞ்சூரியன் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |