கேரட்டில் மஞ்சூரியன் செய்து சாப்பிடுங்க! வாழ்வில் இதன் சுவை மறக்காது
பொதுவாக கேரட் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய காய்கறி வகைகளில் ஒன்று.
இதில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் கேரட்டை பல வித்தியாசமான வகைகளில் சமைத்துக்கலாம். உதாரணமாக கேரட் அல்வா, கேரட் சம்பல், கேரட் கூட்டு போன்றவற்றைக் கூறலாம்.
இந்தபதிவில் கேரட் மஞ்சூரியன் எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
கேரட் மஞ்சூரியனுக்கு தேவையான பொருட்கள்
- கேரட் - 1/4 கிலோ (வட்டமாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
- வெங்காயம் - 1 (நறுக்கியது)
- குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி சாறு - 5 டேபிள் ஸ்பூன்
- சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
- சோயா சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
- சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
- மைதா - 1/4 கப்
- சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
- மிளகு தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
எப்படி செய்யலாம்?
முதலில் ஒரு பவுலில் கலவைக்கு தேவையான பொருட்கள் அணைத்தையும் ஒன்றாக சேர்த்து இட்லி மா பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனை தொடர்ந்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையாளவு வெப்பமேற்ற வேண்டும்.
வெட்டி வைத்த, கேரட் துண்டுகளை கலந்த மா கலவையுடன் கலந்து எண்ணெயிலிட்டு கேரட் பொன்னிறமாகும் வரை பொறித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து வாணலியிலிருந்த எண்ணெய் தனியாக எடுத்து வைத்து விட்டு, பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு மேசைக்கரண்டி மட்டும் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
எண்ணெய்யுடன் வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் தக்காளி சாறு, சோயா மற்றும் சில்லி சாஸ் சேர்த்து எண்ணெயில் கொதிக்க விட வேண்டும்.
கொதிநிலையில் இருக்க, அடுத்து ஒரு கப் சோள மாவு எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து மா கையில் அகப்படாதவாறு கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலியிலுள்ள வெங்காயத்துடன் கலவையை ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க விட்டு, அதனுடன் பொறித்து வைத்த கேரட்டை , உப்பு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளரி விட வேண்டும்.
தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கேரட் மஞ்சூரியன் தயார்.!!