Bread Halwa Recipe: கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
பொதுவாகவே அல்வா என்று சொன்னால் அனைவருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அதிலும் பிரட் அல்வா என்றால் சொல்லவும் வேண்டுமா?
பிரியாணி சாப்பிட்ட பிறகு கடைசியாக பிரட் அல்வாவை எடுத்து, ஆற அமர்ந்து அதை பொறுமையாக ரசித்து சாப்பிடும் அதில் அலாதி இன்பம் கிடைக்கும்.
குறிப்பாக கல்யாண வீட்டு பிரட் அல்வாவின் வாசனை, நினைத்தாலே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும்.
கல்யாண வீட்டு பாணியில் வீட்டிலேயே எளிமையான முறையில் அட்டகாசமான பிரெட் அல்லா எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
பிரெட் -3 துண்டுகள்
சர்க்கரை -½ கப்
பால் -2 கப்
நெய்-½ கப்
முந்திரி - 10
உலர் திராட்சை - 15
ஏலக்காய்தூள் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் பிரெட் துண்டுகளின் ஓரங்களில் இருக்கும் கடுமையான பகுதிகளை அகற்றி சிறிய துண்டுகளாக நறுக்கி தனியான எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடாக்கி, அதில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து உலர் திராட்சையையும் நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்து இரண்டையும் தனித்தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்திருந்த பிரெட் துண்டுகளை நெய்யில் போட்டு பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும். நெய் அதிகமாக சேர்க்க விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்.
பிரெட் நன்றாக வதங்கிய நிலையில் அதில் பாலை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பாலில் பிரெட்டை கரைத்துவி்ட்டு கெட்டியாகும் வரையில் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
அதன் பின்னர் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நன்கு கரையும் வரையில் தொடர்ந்து நன்றாக கிளறிவிட்டு கொண்டே இருக்க வேண்டும்.
அதனையடுத்து ஒரு ஸ்பூன் நெய் ,ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கிளறிவிடடால் அவ்வளவு தான் அருமையான சுவையில் அசத்தல் பிரெட் அல்வா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |