6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் அதிசய கணவர்! வைரலாகும் புகைப்படங்கள்
பிரேசில் நாட்டை சேர்ந்த நபரொருவர் ஒரே வீட்டில் 6 மனைவிகளுடன் வாழும் அனுபவத்தை இன்டாகிராமில் பகிர்ந்து வருகின்றார்.குறித்த விடயம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
பொதுவாக திருமணம் என்றாலே அதிக பொறுப்புகளும் கடமைகளும் இருக்கும் என்பதற்காக பலரும் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்றாலே தற்காலத்தில் பயப்பட ஆரம்பித்துவிடுகின்றார்கள்.
ஆனால், பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது மாத்திரமன்றி இந்த அனுபவத்தை சமூக வளைத்தளங்களில் பகிர்ந்தும் வருகின்றார்.
இவர் மொத்தம் 9 முறை திருமணம் செய்து பின்னர் 4 பேரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளதுடன் 6 பெண்களுடனும் ஒரே வீட்டில் வாழ்கின்றார்.
இருப்பினும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் சட்டப்படி பிரேசில் நாட்டில் அங்கீகரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இவர் 6 மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்து வரும் நிலையில் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |