Viral Video: பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்திற்கு மத்தியில் பெண் செய்த காரியம்! சம்பவத்தின் பின்னணி என்ன?
பெண் ஒருவர் ஆர்பரித்து ஓடும் வெள்ளத்திற்கு மத்தியில் தனது உயிரை பொருட்படுத்தாமல் செய்த காரியம் இணையவாசிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளத்திற்கு மத்தியில் இப்படியொரு சேவையா?
இந்திய மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் செவிலியர் ஒருவர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்திற்கு மத்தியில் தனது கடமையை செய்துள்ளார்.
குறித்த செவிலியர் 2 மாத குழந்தை ஒன்றிற்கு தடுப்பூசி செலுத்துவதற்காகவே இவ்வாறு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்திற்குள் உயிரை பணய வைத்து வந்துள்ளார்.
செவிலியர் பெயர் கமலா என்று தெரியவந்துள்ளது. குறித்த ஊரில் மருத்துவமனை இல்லாத காரணத்தினால் குழந்தை நோய்வாய்ப்படக்கூடாது என்பதற்காக இவ்வாறு துணிச்சலான செயலை செய்துள்ளார்.
இக்காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், செவிலியரின் இந்த செயலையும் பாராட்டி வருகின்றனர்.