ஆண்களே கிடு கிடு என்று தாடி வளரவேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!
ஆண்களின் அழகை மெருகேற்றிக் காட்டுவதில் அவர்களின் தாடிக்கு பெரும் பங்குண்டு.
தாடி வைத்துள்ள ஆண்களை பெரும்பாலான பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் முடி வளர்வது போல் சில ஆண்களுக்கு தாடி வளர்வதில்லை. அது சில சந்தர்ப்பங்களில் பரம்பரை மற்றும் மரபணு கோளாறாகக் கூட இருக்கலாம்.
இது ஆண்களுக்கு கவலையளிப்பதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் இருக்கும். ஆனால், இயற்கையாகவே தாடியை வளரச் செய்வதற்கு பல வழிகள் காணப்படுகின்றன.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு ரோஸ் மேரி எண்ணெய் சேர்த்து கலந்து, தாடி வளரும் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
யூகலிப்டஸ் ஒயில்
யூகலிப்டஸ் எண்ணெயுடன் ஒலிவ் ஒயில் சேர்த்து தாடி வளரும் இடத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும்.
நெல்லிக்காய் எண்ணெய்
கடுகு இலையை அரைத்து சில துளிகள் நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்த கலந்து தாடி வளரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்த பின் குளிர்ந்த நீரால் கழுவலாம்.
எலுமிச்சை
எலுமிச்சை சாற்றுடன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து, தாடி வளரும் இடத்தில் 20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
ஈரப்பதமான சருமம்
தாடி கண்டிஷனர் அல்லது பிசுபிசுப்பு அல்லாத மொய்ஸ்சுரைசரைக் கொண்டு தினமும் இரண்டு முறை சருமத்தை ஈரப்பதமூட்ட வேண்டும்.