ஆசிட் வீசி கொன்று விடுவேன்!! நிச்சயமான பெண்ணை மிரட்டிய மாப்பிள்ளை- விசாரணையில் வெளியான உண்மை
தமிழகத்தில் ஏற்கனவே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை திருமணம் செய்ய முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடியை சேர்ந்த பெண் பிரியதர்ஷினி, போரூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறது.
அங்கு தன்னுடன் வேலை செய்யும் பெனட் ராயன் என்பவரை காதலித்துள்ளார்.
இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இதனையடுத்து தனக்கு அவசர செலவு இருப்பதாக கூறி பெனட், பிரியதர்ஷினியிடம் பணம் கேட்டுள்ளார்.
அவரும் வருங்கால கணவர் தானே என கூறி, சுமார் 3 லட்சம் வரை கொடுத்துள்ளார்.
இதன்பின்னரே, பெனட்டுக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்துள்ளது, உடனடியாக விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்ட பெனட், 1 லட்சத்தை திருப்பி கொடுத்துள்ளார்.
மீதி பணத்தை கேட்ட போது, ஆசிட் வீசி கொன்று விட்டேன் என கொலை மிரட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளார்.
இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி பிரியதர்ஷினி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.