குட்டி சிறுவனின் மடியில் ஒய்யாரமாக தவழும் ஆட்டுக்குட்டி!
ஆட்டுக்குட்டியின் மடியில் வைத்து கொஞ்சி விளையாடும் குட்டி குழந்தையின் வீடியோ காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள்
தற்போது இணையப்பக்கம் சென்றாலே விலங்குகளின் வேடிக்கைகள் தான் முன் நின்று நம்மை வரவேற்கிறது.
அந்தளவு விலங்குகளின் வீடியோக்கள் முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரவிக் கிடக்கிறது.
இது போன்ற வீடியோக்களை பார்க்கும் போது நமக்கு இருக்கும் மன அழுத்தங்கள் குறைவதன் காரணமாக அதிகமான பயனர்கள் இதனை தேடி தேடி பார்த்து வருகிறார்கள்.
விலங்குகளின் வேடிக்கை வீடியோக்களை வைத்து டுவிட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கங்களில் பிரபல்யமடைந்து வரும் பயனர்களை தினமும் பார்க்ககூடியதாய் இருக்கிறது.
சிறுவன் மடியில் ஆட்டுக்குட்டி
இந்த நிலையில், சுமார் 2 தொடக்கம் 3 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவன் ஒருவன் ஆட்டுக்குட்டியொன்றை மடியில் வைத்து கொஞ்சும் காட்சி இணையவாசிகளின் நெஞ்சங்களை கவர்ந்துள்ளது.
பொதுவாக நமது வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். இதனாலேயே வீடுகளில் பூனை, நாய் போன்ற பிராணிகள் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ குழந்தை மடியில் இன்னொரு குழந்தை” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.