உங்கள் இதயம் ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் - இதை மட்டும் புறக்கணிக்காதீங்க
நமது இதயம் நோய்வாய்பட்டுள்ளது அது ஆபத்தில் இருக்கிறது என்பதற்கான ஐந்து அறிகுறிகள் பற்றி பதிவில் பார்க்கலாம்.

இதயம்
இதய நோய் இப்போது யாருக்கு தான் வரவில்லை தவறான உணவுமுறை காரணமாக சிறுவயது முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதயத்தில் கொலஸ்ரால் ஏறிக்கொண்டே செல்கிறது.
இதயத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் அமைப்புகள் சேதமடையும்போது இதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த நிலை கரோனரி தமனி நோய் என்றும் அழைக்கப்படுகிறது.

இதனால் இரத்த குழாய்களில் இரத்த ஓட்டம் தடைபடும் போது நமக்கு மாரடைப்பு போன்ற நோய்கள் வரும்.
உலகளவில் அதிகளவு மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில், இதய நோய்களே முதன்மையான காரணமாகத் திகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவிக்கிறது.
எனவே நமக்கு இதயத்தில் அடைப்பு இருக்கிறதா அல்லது இதய நோய் ஏற்படுமா என்பதை சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம் அந்த அறிகுறிகள் பற்றி பதிவில் பார்க்கலாம்.

அறிகுறிகள்
1
நீங்கள் போதுமான அளவு ஓய்வெடுத்து நன்றாக தூங்கிய பின்னரும் உங்களுக்கு சோர்வாக இருக்கிறது என்றால் உங்கள் இதயம் ஆபத்தில் இருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி இது தான். இதயம் வேலை செய்வதில் சிரமப்பட்டு உடல் முழுவதும் ஆக்சிஜனை பாய்ச்சியதால் தான் நமது உடல் இப்படியான அறிகுறியை கொடுக்கும்.
2
நமது இதயம் ரத்தத்தை கொண்டு செல்வதில் தாமதமோ அல்லது சிரமமோ இருந்தால் நமக்கு மூச்சு திணரல் ஏற்படும். இது இதயம் ஆபத்தாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி ஆகும்.

3
திடீர் தலைச்சுற்றல், குமட்டல் அல்லது வயிறு உப்புசம் ஆகியவை சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறி எனப்படுகின்றது. இதை பல மக்கள் புறக்கணிக்கின்றனர். ஆனால் இந்த அறிகுறி இதய நோயின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று. இந்த அறிகுறி தெரிந்தவுடன் நீங்கள் மருத்துவரை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம்.
4
இரவில் நீங்கள் தூங்காமல் அசளகரியப்பட்டுக்கொண்டு இருந்தால் அது மாரடைப்பிற்கான அறிகுறி எனப்படுகின்றது. இப்படி தூங“காமல் இருப்பதற்கான காரணம் மாரடைப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் உள்ள சிக்கல்களின் எச்சரிக்கை எனப்படுகின்றது.

5
உங்களுக்க இதயத்தில் வலி இருந்தால் அல்லது லேசாக குத்துவது போல இருந்தால் நிங்கள் கவனமாக இருக்க வேண்டும். இது மாரடைப்பின் ஓர் அறிகுறியாகும்.பெரும்பாலான மக்கள் ஆனால் இதுபோன்ற அறிகுறிகளை புறக்கணக்காமல் மருத்துவ ஆலாசனை பெறுவது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |