வெறும் பனியை சாப்பிட்டு உயிர் வாழ்ந்த சிறுவன்...அமெரிக்காவில் சம்பவம்
தற்போதெல்லாம் சிறுவர்கள் காணாமல் போவது அதிகரித்துவிட்டது. அதேசமயம் சிறுவர்களின் புத்திக்கூர்மையும் அதிகரித்துவிட்டது எனக் கூறலாம்.
அப்படியொரு சம்பவம்தான் அமெரிக்காவில் நடந்துள்ளது.
தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவின் மிச்சிகன் பகுதிக்கு சுற்றுலா சென்றிருக்கிறான் நன்டே செய்மி என்ற 8 வயது சிறுவன்.
image - BBC
சுற்றுலா சென்ற இடத்தில் குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளான். இதனைத் தொடர்ந்து காணாமல்போன சிறுவனை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த சிறுவன் பார்குபைன் என்ற மலைப்பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.
கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன், தான் இரண்டு நாட்களாக மரக்கட்டையின் கீழ்ப்பகுதியில் பதுங்கி இருந்ததாகவும் வெறும் பனியை மாத்திரமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாகவும் கூறியுள்ளான்.