வக்ர தாண்டவத்தை ஆட ஆரம்பிக்கும் உக்கிர சனி! ஆட்டம் காண போகும் 9 கிரங்கள்....எச்சரிக்கை!
சனி கிரகமே ஆயுள்காரகன். ஒருவன் இறப்பதும், இருப்பதும் சனியின் வேலையே.
சனிக் உடலுறுப்புகளில் பாதத்துக்கும் பெருங்குடலுக்கும் அதிபதி.
சனி கிரகம் இப்போது கும்ப ராசியில் அதிசாரமாக பயணம் செய்கிறார். இன்னும் சில நாட்களில் வக்ர கதியில் பயணம் செய்வார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், ராகு, கேது ஆகிய கிரகங்களுடன் சனி இணைந்து பயணம் செய்யும் போது அந்த ஜாதகர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
சனி - சூரியன்
சனியும் சூரியனும் ஒருவருக்கு ஒருவர் பகைவர் என்பதால், இந்தச் சேர்க்கை அவ்வளவு சிறப்பானது இல்லை.
இந்த ஜாதக அமைப்பு இருப்பவர்களுக்கு தந்தைக்கும் பிள்ளைக்குமான உறவு சுமுகமாக இருப்பததில்லை. சொத்துக்கள் சம்பந்தமாக கோர்ட்டுக்குச் செல்லவும்கூடும். இவர்களுக்கு சனிதசை சூரியபுக்தி அல்லது சூரியதசை சனிபுக்தி நடைபெறும் காலங்களில், உரிய பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.
சனி - சந்திரன்
இந்த கிரக கூட்டணி அமைந்தவர்கள் புனர்ப்பு தோஷம் ஏற்படும் அமைப்பு கொண்டவர்கள். திருமணம் தாமதமாகவே சிலருக்கு சீக்கிரமாகவே நடைபெறும்.
அழகான தோற்றத்துடன் திடகாத்திரமாகக் காணப்படும் இவர்கள் ஊர் சுற்றுவதில் பிரியம் கொண்டிருப்பார்கள். உடல் நலனைப் பராமரிப்பதில் சிரத்தையுடன் இருப்பார்கள். இவர்களில் ஒருசிலர் இளம் வயதிலேயே தாயை இழக்க நேரிடலாம். இயல்பிலேயே சாமர்த்தியசாலிகளான இவர்கள் பகைவர்களை சுலபமாக வெல்லக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பார்கள்.
சனி - செவ்வாய்
நீண்ட கைகளைப் பெற்றிருக்கும் இவர்கள் நல்ல கல்வியறிவும், புத்திக்கூர்மையும், திறமையும் ஒருசேரப் பெற்றிருப்பார்கள்.
எல்லாவிதமான சுகசெளகர்யங்களைப் பெற்றிருக்கும் இவர்கள் மற்றவர்களால் பெரிதும் புகழப்படுவார்கள். தன்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உபகாரம் செய்வார்கள். அதேநேரம், தவறு செய்பவர்களைக் கண்டால் தயவுதாட்சண்யம் பார்க்கமாட்டார்கள்.
கெமிக்கல், இரும்பு தொடர்பான தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட்டுப் பணம் சம்பாதிப்பார்கள். எப்போதும் சிந்தனை வயப்பட்டவர்களாகக் காணப்படுவார்கள்.
சனி - புதன்
நிறைந்த கல்வியறிவு பெற்றிருக்கும் இவர்கள், சாஸ்திர ஆராய்ச்சிகளிலும், வாதப் பிரதிவாதங்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். ஆசிரியராகவோ மதாசாரியராகவோ புகழ் பெறுவார்கள். அரசாங்கம் தொடர்பான சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். எந்தத் துறையாக இருந்தாலும், அதில் அதிகாரம் மிக்க பணியில் இருப்பார்கள்.
சனி - குரு
ஜாதகத்தில் இந்த கூட்டணி அமையப்பெற்றவர்கள் நிறைந்த கல்வியறிவும் ஞானமும் பெற்றிருந்தாலும், அதனால் இவர்கள் அடையக்கூடிய பலன்கள் மிகக் குறைவாகவே இருக்கும்.
தாய்மாமன் வகையில் மிகுந்த ஆதரவு உண்டு. 30 வயதுக்குப் பிறகு ஜாதகருக்கு எதிர்பாராத பதவி கிடைப்பதுடன், சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். இவர்களில் பலரும் பணம் கொடுக்கல் வாங்கலிலும், பணம் புழங்கக்கூடிய இடங்களிலும் வேலை செய்து பணம் சம்பாதிப்பர்.
சனி - சுக்ரன்
அந்தஸ்தும் அதிகாரமும் உள்ள பதவிகளில் இருப்பார்கள். பல ஆட்களை வைத்து வேலை வாங்கும்படியான அதிகார யோகமும் இவர்களுக்கு உண்டு. சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருக்கும் இவர்களுக்கு, அவர்களுடைய ஆதரவும் கிடைக்கும். வைரம், பொன், வஸ்திர ஆபரணங்களுடன் உன்னதமான நிலையில் இருப்பார்கள்.
சனி - ராகு
ஜாதகத்தில் சனி ராகு கூட்டணி அமைந்தவர்களுக்கு அதிக கல்வியறிவு இருக்கும். இவர்கள் அரசருக்கு நிகராக பணியாள்கள் சூழ இருப்பார்கள்.
நிலங்கள், வீடு வாசல், மாடு, கன்றுகள், பால்பாக்யம், கீர்த்தி, வண்டி, வாகனங்கள் முதலியவற்றுடன் பலரும் மதிக்கும்படியாக வாழ்வார்கள். இவர்களுக்குச் சகோதர, சகோதரி வகையில் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும்.பெண்களால் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும்.
சனி - கேது
ஜாதகத்தில் இந்தச் சேர்க்கையானது நல்ல இடத்தில் அமையப் பெற்றிருந்தால், ஆன்மிகத்தில் நாட்டமும், தெய்வ பக்தியும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சரியில்லாத இடத்தில் இந்த கூட்டணி அமைந்தால் கோபமும், பிறரை ஏமாற்றும் குணமும் கொண்டிருப்பார்கள்.
இவர்களில் சிலருக்கு காம உணர்ச்சி சற்று மிகுதியாகக் காணப்படும். பெயருக்கு ஆசைப்பட்டு, தான தர்மங்களைச் செய்வார்கள். மற்றவர்கள் வீட்டில் உணவு உண்பதில் பிரியம் இருக்கும். பித்த சம்பந்தமான நோய்கள் இவர்களுக்கு ஏற்படக்கூடும்.