இந்த திகதிகளில் பிறந்தவர்களை அனைவருக்கும் பிடிக்குமாம்... ஏன்னு தெரியமா?
பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அதுபோலவே எண்கணித ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை இயல்பாகவே ஈர்க்கும் தம்மையை கொண்டிருப்பார்கள்.
அப்படி எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்களை அனைவருக்கும் பிடிக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 9
9,18,27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே குறும்புத்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்வில் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் தங்களின் நகைச்சுவை குணத்தால் எளிமையாக அதிலிருந்து வெளிவந்து விடுவார்கள். இவர்கள் இருக்கும் இடம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால் அனைவரும் இவர்களை விரும்புவார்கள்.
எண் 5
5,14,23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் புதுமையான விடங்களை முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அதனால் இவர்களை சுற்றி எப்போதும் கலகலப்பான சூழல் காணப்படும். அதன் காரணமாக இவர்கள் அனைவராலும் ஈர்க்கப்படுகின்றார்கள்.
எண் 1
1,10,19,28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் முன்னேறுவது போல் கூட இருப்பவர்களையும் முன்னேற்ற பாதையில் நடத்த வேண்டும் என்ற உயரிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களை அனைவரும் விரும்புவார்கள்.
எண் 7
7,16,25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் விளையாட்டுத்தனமாக செயற்படகூடியவர்களாக இருப்பார்கள். மிகவும் குறும்புத்தனமான குணம் கொண்ட இவர்களுக்கு மற்றவர்களை ஈர்க்கும் தன்மை இயல்பிலேயே அமைந்திருக்கும்.
எண் 3
3,12,21,30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மிகுந்த படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே நேரம் இவர்களின் பேச்சு மற்றும் நடத்தை மிகவும் வேடிக்கையானதாக இருக்கும் இதனால் இவர்களை அனைவரும் விரும்புவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |