நாவூற வைக்கும் பூந்தி லட்டு! இனி வீட்டிலேயே செய்து ருசிக்கலாம்
சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று பூந்தி லட்டு.
கடலை புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது.
இறைச்சிக்கு ஒரு அருமையான மாற்றாக கடலை உள்ளது. இதில் பல்வேறு உணவுகளை செய்து ருசிக்கலாம். இன்று நாம் கடலை மாவில் செய்ய கூடிய இனிப்பு வகைகளில் ஒன்றான பூந்தி லட்டு குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு – 3 கப்
- தண்ணீர் – தேவையான அளவு
- உப்பு – மிகவும் சிறிதளவு
- சோடா உப்பு – ஒரு சிட்டிகை
- கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
- வெள்ளை சர்க்கரை – 3 கப்
- பாகு காய்ச்ச தண்ணீர் – 1 கப்
- ஏலக்காய் – 3 எண்ணம்
- கிராம்பு – 4 எண்ணம்
- தாளித்துக் கொட்ட முந்திரி பருப்பு – 15
- எண்ணம் கிஸ்மிஸ் – 15 எண்ணம்
- நெய் – 4 ஸ்பூன்
பூந்தி லட்டு தயாரிப்பு
முதலில் கடலை மாவினை பாத்திரத்தில் எடுத்து உப்பு நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் கடலை மாவு கலவையினை நன்கு சலித்துக் கொள்ளவும். இந்த கலவையுடன் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைக்கவும்.
பின்னர் அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து, தோசை மாவின் பதத்திற்கும் கரைத்துக் கொள்ளவும்.
பிறகு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய விடவும்.
இப்பொழுது பூந்திக் கரண்டியை எண்ணெயின் மேல் 10 செமீ உயரத்திற்கு வைத்து, ஒரு கரண்டி மாவினை மட்டும் எடுத்து ஊற்றவும். மாவு பூந்திகளாக எண்ணெயில் விழும்.
இவ்வாறு எல்லா மாவினையும் பூந்திகளாக பொரித்து, எண்ணெயை வடித்து விட்டு சேர்த்து வைக்கவும்.
பாகு தயார் செய்தல்
ஏலக்காய் மற்றும் கிராம்பினை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு சர்க்கரைப் பாகு காயுங்கள்.
இப்பொழுது பொரித்து வைத்துள்ள பூந்திகளை சர்க்கரைப் பாகுகில் கொட்டி நன்கு கலந்து விடவும். பத்து நிமிட இடைவெளியில் பூந்திகளை பாகில் ஒருசேர நன்கு கிளறி விடவும்.
இருபது நிமிடங்கள் கழித்து பாத்திரத்தினை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும், அதில் முந்திரிப் பருப்புகளை ஒன்றிரண்டாக உடைத்து சேர்க்கவும்.
முந்திரிப் பருப்புகள் லேசாக நிறம் மாறத் தொடங்கியதும் கிஸ்மிஸ் பழங்களைச் சேர்த்து வதக்கவும். கிஸ்மிஸ் பலூன் போல் உப்பியதும் அடுப்பினை அணைத்துவிட்டு, பூந்திக் கலவையில் கொட்டி நன்கு ஒருசேரக் கிளறவும்.
பூந்திகள் எல்லாம் சர்க்கரைப்பாகினை உறிஞ்சியதும் (அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை) வெது வெதுப்பான சூட்டில் பூந்திகள் ஒருசேர திரண்டு வரும்.
லட்டு பிடிக்க இதுவே சரியான பதம். வேண்டிய அளவு பூந்திகளை எடுத்து உருண்டையாக அழுத்திப் பிடிக்கவும்.
சுவையான பூந்தி லட்டு தயார்.