உங்கள் எலும்புகளை பாதிக்கும் இந்த விடயங்களை இனி செய்யாதீர்கள்
பொதுவாகவே நாம் எல்லோரும் தினமும் பிஸி பிஸி என்றுதான் சுழன்றுக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு இருக்கும் போது நம் ஆரோக்கியத்தைப் பற்றி ஒருநாளும் கவனத்தில் கொள்வதில்லை.
என்ன சாப்பிடுகிறோம், உடலுக்கு சரியான உணவை சாப்பிடுகிறோமா? ஆரோக்கியமாக இருக்கிறோமா என்றெல்லாம் கவனத்தில் கொள்வதில்லை அப்படி நாம் சில சில விடயங்களை செய்யும் போதும் ஆரோக்கியம் பாதிப்படைகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
அவை உடனடியாக உங்கள் எலும்புகளையும் தசைகளையும் தான் பாதிக்கிறது. அந்த வகையில் நீங்கள் தினமும் செய்யும் இந்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்கங்கள்
நமது உடலுக்கு தேவையான உடல் செயல்பாடுகள் இல்லாவிட்டால் எழும்புகள் பலவீனமடையும் இதனால் உடலுக்கு தேவையான உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியை செய்தால் எழும்புகள் பலவீனமடையும்.
தினமும் சாப்பிடும் உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொண்டால் உடலில் இருக்கும் கல்சிய சத்துக் குறைந்து எலும்புகள் வலிமை இழக்கும் அதனால் தினமும் உப்பு சேர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மனிதன் தினமும் 6 முதல் 8 மணிநேரம் வரைக்கும் தூங்க வேண்டும் இல்லையென்றால் எலும்புகள் பலவீனம் ஆகும்
நமது எழும்புகளுக்கு வைட்டமின்கள் என்பது மிகவும் அவசியமானதொன்று இது இயற்கையாகவும் கிடைக்கிறது, சில உணவுகளிலும் கிடைக்கிறது இந்த வைட்டமின் உணவுகளை தவிர்ப்பதால் எலும்பு பலவீனமடைவது மட்டுமல்லாமல் வேறு சில நோய்களும் ஏற்படும்.
அதிகம் புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு உண்டாகி எலும்புகளை பலமில்லாமல் போகும் அதனால் புகைப்பிடித்தலை நிறுத்தவேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |