எலும்புகளை அப்படியே விழுங்கும் கழுகுகள்! அசர வைக்கும் வாழ்க்கை முறை
ஆபிரிக்க, ஆசிய, ஐரோப்பிய மலை பகுதிகளில் செரிந்து வாழும் எலும்புகளை அப்படியே விழுங்கும் கழுகுகளின் சில வாழ்க்கை முறை பழக்கங்கள் கேட்போரை வியப்பில் ஆழ்த்கின்றன.
இந்த “தாடிக்காரக் கழுகு” (bearded vulture)பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்களை சிலவற்றை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வியக்க வைக்கும் பழக்கங்கள்
தாடியுள்ள இந்தக் கழுகின் உணவில் 70 வீதம் தொடக்கம் 90 வீதமான அளவு இருப்பது மிருகங்களின் எலும்புகள் தான் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம், இந்த இனக் கழுகுகள் ஏனைய காட்டு வாழ் விலங்குகள் கொல்லப்பட்ட மிருகத்தின் முழு மாமிசத்தையும் தின்று தீர்க்கும்வரை காத்திருந்து இறுதியில் மிஞ்சும் எலும்புகளை சுவைத்து உண்கின்றன.
சிறிய எலும்புகளை அப்படியே முழுதாக விழுங்கி விடுகிடும் இந்த கழுகுகள் பெரிய எலும்புகளை சாப்பிடும் முறை தான் இன்னும் விநோதமானது. எலும்பை வாயில் கவ்விக் கொண்டு, மிக உயரப் பறந்து, அலகிலுள்ள எலும்பை தரையை நோக்கிப் போடுகின்றன.

உயரத்திலிருந்து விழும் வேகத்தில் எலும்பு நொருங்கிச் சிதற, துாளாகிய எலும்பையும், அதனுள் இருக்கும் மஜ்ஜையையும்(marrow) இவை கொத்தி விழுங்குகின்றன. இவற்றின் அறிவாற்றலும் வியக்க வைக்கும் வகையில் தான் இருக்கின்றது.
தன் சாப்பாட்டில் ஏறத்தாழ 95 வீதமான எலும்பைக் கொண்டிருக்கும் ஒரேயொரு பறவை இனம் இந்தத் தாடிக்கார கழுகுதான்.
ஒரு செம்மறி ஆட்டின் அளவு மிருகத்தின் உடல் எலும்புகளை, இதனால் சர்வசாதாரணமாக முழுங்க முடியும் என்கிறார்கள்.
கால் நகங்களால் பற்றிப் பிடித்து, அலகால் கொத்தி உடைக்குமளவிற்கு , அலகோ, கால்நகங்களோ பலமானவையாக இல்லை.

இதனால்தான் தன் கூரிய கண்களால் தரையிலுள்ள ஒரு பெரிய கல்லைக் குறிவைத்து, எலும்பைப் போடுவதுண்டு.
குறிதவறினால் விட்டுவிடுவதில்லை. எலும்பு நொருங்கும் வரை தன் முயற்சியைத் தொடரும் விடாமுயற்ச்சி இந்த பறவைகளிடம் நிச்சயம் இருக்கும்.
இப்படி எலும்புகளை விழுங்குகிறதே இதற்கு அஜீரணம், வயிற்றுக் கோளாறு எல்லாம் வராதா என்ற சந்தேகம் இப்போது எழுந்திருக்கும்.
இந்த வகை கழுகுகளின் சமிபாட்டு உறுப்பில் மிகவும் சக்தி வாய்ந்த அமிலம் சுரந்து கொண்டே இருக்கும்.இது 24 மணி நேரத்தில் எந்த எலும்பையும் மலக் கழிவாக்கிவிடும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது.

குஞ்சுகளுக்கும் எலும்புகள்தான் உணவா?
இந்தவகை கழுகுகள் தங்களின் குஞ்சுகளுக்கு எலும்பை தான் உணவாக கொடுக்கின்றதா என்றால் கிடையாது. மாமிசத்தை அல்லது எலும்புகளில் ஒட்டியிருக்கும் கொழுப்பைக் கொடுத்தே குஞ்சுகளை இவை வளர்க்கின்றன.
மாமிசம் இருக்க எதற்கு இந்த பறவை மாத்திரம் எலும்புகளையே சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்றால், எல்லா மிருகங்களுமே மாமிசத்தையே தேட, மிஞ்சம் எலும்புகள் அனாதைகளாகத் தேங்கி விடுகின்றன.

நினைத்த நேரம், நினைத்த இடத்தில் எலும்புகளைத் தேட முடிவதால், எப்பொழுதுமே உணவு இந்ந்தப் பறவைகளுக்கு தயார் நிலையில் இருக்கின்றன. இயற்கையாகவே காடுகளை சுத்தப்படுத்தும் இந்த பறவை இயற்கையின் விந்தைகளில் ஒன்று என்று தான் கூற வேண்டும்.
காட்டு விலங்குகளின் இறந்த உடல்களின் எலும்புகளையும் மிச்சம் இன்றி இவை சாப்பிட்டு செரிமானம் செய்வதால் தான் உலகில் துர்நாற்றம் மற்றும் அதிக நோய் தொற்று பரவாமல் இருக்கின்றது.
ஆனால் இந்த கழுகுகளால் சிறிய முடியை கூட செரிமானம் பண்ண முடியாதாம். இவை சாப்பிடும் எலும்புகளில் விலங்குகளின் உரோமம் சிறிது இருந்தாலும் அவற்றை வாந்தி மூலம் தான் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |