இனி ஹோட்டலுக்கு போக வேண்டாம்: ஊரே மணமணக்கும் போண்டா ரெசிபி
பொதுவாக வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றாலே மிகவும் பிடிக்கும்.
அந்த வகையில் காலையில் எழுந்ததும் என்ன சாப்பாடு அப்புறம் என ஸ்நாக்ஸ் பண்ண போறீங்க என கேட்கும் குழந்தைகள் தான் இப்போது அதிகம் இருக்கிறார்கள். மதிய உணவு முடிந்தவுடன் சில வீடுகளில் ஸ்நாக்ஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
இவ்வாறு செய்யும் சில நேரங்களில் என்ன செய்யலாம் என அதிக சிந்தனையும் இருக்கும்.
இனி எந்தவிதமான யோசனையும் வேண்டாம் வாரத்திற்கு இரண்டு தடவைகள் சரி இந்த ரெசிபியில் போண்டா செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
சீரகம் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லி இலை - 1 கைபிடி அளவு
வெங்காயம் - 1/2
தயிர் - 1 கப்
உப்பு - தேவையானளவு
போண்டா செய்முறை
முதலில் தேவையான அளவு ரவை எடுத்து அதனை மிக்ஸி சாரில் போட்டு அரைத்து கொள்ளவும். இதன் பதம் பவுடர் போல் இருக்க வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பவுலில் கொட்டி விட்டு அதன் மேல் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை,மல்லி இலை, வெங்காயம், தயிர் ஆகிய பொருட்களை ஒன்றாக கலந்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்து கொண்டு தேவையானளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பின்னர் சுமாராக ஒரு 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து கொள்ளுங்கள்.
ஊறிய பின்னர் அந்த மாவை மறுபடியும் நன்றாக 2 நிமிடங்களுக்கு பிசைந்து கொள்ளுங்கள். இறுதியாக சிறிய சிறிய துண்டுகளாக அள்ளி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளுங்கள்.
பொன்னிறமானதும் இறக்கிய சுவைத்தால் சுவையான போண்டா தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |