எடையை மின்னல் வேகத்தில் குறைக்க இதை குடிங்க! 7 நாட்களில் கொழுப்பு கரைஞ்சிடும்
எலுமிச்சை வேக வைத்த நீர் உடல் எடையைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதுவும் எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடிப்பதன் மூலம், உடலில் உள்ள கொழுப்புக்கள் விரைவாக குறையத் தொடங்கும்.
எலுமிச்சையின் சத்துக்கள்
எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் ஃபோலேட் அமிலம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன.

இது தவிர, எலுமிச்சை உடல் எடையைக் குறைப்பதிலும், சிறுநீரக கற்களைக் கரைப்பதிலும் பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இப்போது நாம் எலுமிச்சை வேக வைத்த நீரை எப்படி எடையை குறைக்க பயன்படுத்தலாம் என்பதை காண்போம்.
எலுமிச்சை வேக வைத்த நீரை தயாரிப்பது எப்படி?
எலுமிச்சை நீரை தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அதில் பாதி எலுமிச்சையை வெட்டி போட்டு சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
பிறகு இறக்கி குளிர வைக்கவும்.

விரும்பினால் குளிர்ந்த பிறகு தேன் கலந்து குடிக்வும்.
இந்த எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக குடிக்கலாம். இருப்பினும், அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸை குடிப்பது சரும அழற்சி மற்றும் அரிப்பை உண்டாக்கும்.
எனவே இந்த பானத்தை தினமும் குடிப்பதாக இருந்தால் மருத்துவரை ஆலோசித்த பின்னர் தொடங்குங்கள்.
ஒரே வாரத்தில் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.