கர்ப்பிணி பெண்களின் நஞ்சுக்கொடியை தாக்கும் அரிய வகை virus- வேறு எந்த உறுப்புக்களை பாதிக்கும்?
தற்போது டெங்குவை போல் இந்தியாவில் வேகமாக பரவி வரும் தொற்று தான் ஜிகா வைரஸ்.
இது கடந்த 1947 ஆம் ஆண்டில் உகாண்டாவில் முதன்முதலாக கொசுக்களால் பரவிய நோய்.
இந்த வைரஸ் குறிப்பாக ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகியவற்றின் மூலம் பரவக் கூடியது.
இந்த வகை கொசுக்கள் பகலில் சுறுசுறுப்பாக செயல்பட்டு தொற்றை பரப்பும்.
ஜிகா வைரஸ் பாலியல் தொடர்பு, இரத்த மாற்றம் மற்றும் கர்ப்பத்தின் மூலம் குழந்தைக்கு இப்படி வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது.
அந்த வகையில் ஜிகா வைரஸ் வேறு என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஜிகா வைரஸ் எப்படி உடலினுள் நுழைகிறது
ஏடிஸ் கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது அவர்களின் இரத்த ஓட்டத்தின் மூலம் வேகமாக ஊடுருவி மனிதர்களுக்குள் பரவும். முதலில் நோயெதிர்ப்பு மண்டல செல்கள் மற்றும் நஞ்சுக்கொடி செல்கள் போன்றவற்றை குறி வைத்து தாக்கும்.
இவை வீக்கானவுடன் முழு உடம்பையும் ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும்.
நோயெதிர்ப்பு மண்டலம் எவ்வளவு தான் தொற்றை எதிர்த்து போராடினாலும் அதன் பலனில்லாமல் வைரஸை தொற்று நீடித்திருக்கிறது.
ஜிகா வைரஸ் தாக்கும் உறுப்புக்கள்
1. ஜிகா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களின் நஞ்சுக்கொடி தாக்கும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மைக்ரோசெபாலி உருவாகும் அபாயம் ஏற்படும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை தலை சிறியதாக பிறக்கும். அத்துடன் இது மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
2. குறித்த வைரஸ் மூளையை மட்டும் தாக்குவதில்லை. மாறாக முக்கிய உறுப்பான கண்களையும் பாதிக்கிறது. இதனால் கண்ணின் உள்ளே வீக்கம், வலி, சிவத்தல் மற்றும் பார்வை சிக்கல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இப்படியான நேரங்களில் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
3. ஜிகா வைரஸ் இதயத்தை தாக்கி, மயோர்கார்டிடிஸை என்ற நிலையை ஏற்படுத்தும். இதனால் இதயம் பலவீனமாவதோடு, மார்பு வலி, சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சினைகள் தீவிரமானால் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |