திமிங்கிலம் பாலூட்டுவதை எப்போதாவது பார்த்ததுண்டா? படு வைரலாகும் அரிய காணொளி!
திமிங்கிலமொன்று தன் குட்டிக்கு பாலூட்டும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது.
கடலில் வாழ்ந்தாலும் திமிங்கிலங்கள் ஏனைய கடல்வாழ் உயிரினங்களில் இருந்து முற்றிலும் வேறுப்பட்ட இயல்புகளை கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவையாக அறியப்படும் நீலதிமிங்கிலங்கள்மீன்களைப் போல் நீரிலேயே வாழ்ந்தாலும், மனிதர்களைப் போன்றே குட்டிகளை ஈன்று பாலூட்டுவது, நுரையீரல் மூலம் சுவாசிப்பது மற்றும் வெப்ப இரத்தத்தைக் கொண்டிருப்பது என விசேட இயல்புகளை கொண்டுள்ளன.
நீலத் திமிங்கிலத்தின் குட்டி தினமும் சுமார் 200முதல் 400 லிட்டர் வரை கொழுப்புச் சத்து மிகுந்த தாய்ப்பாலைக் குடிப்பதன் மூலம், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5 கிலோ வரை எடை கூடுகிறது.
எனவே, இதன் மூலம் ஒரு குட்டித் திமிங்கிலம் 24 மணிஆநரத்தில் 100 கிலோ வரையில் எடையை மிக எளிதாக அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்க்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |