ரஜினி...நிம்மதி இல்லனா சொத்தை எழுதி வச்சுட்டு இமயமலைக்கு போங்க! ப்ளூ சட்டை மாறன்
நடிகர் ரஜினிகாந்தை சொத்துக்களை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு இமயமலைக்கு செல்லுமாறு ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது பற்றி தான் தற்போது பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நிகழ்ச்சியில் ரஜினி , பணம், புகழ், பெயர், பெரிய பெரிய அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என அனைத்தையும் பார்த்த எனக்கு சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இந்நிலையில் விமர்சகரும், இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் ரஜினி பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
உங்க படத்துல வர்ற மாதிரி எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு... இமயமலையில் நிம்மதியை தேடலாமே ஜி என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.