Viral Video: நாரையிடமிருந்து தப்பிக்க போராடும் மீன்... கடைசி வரை நடந்த போராட்டம்
நாரை ஒன்று மீன் ஒன்றினை வேட்டையாடிய நிலையல், குறித்த மீன் நாரையின் பிடியிலிருந்து தப்பிக்க பயங்கர ரிஸ்க் எடுத்தும் கடைசியில் முடியாமல் உணவாகியுள்ளது.
நாரையின் வேட்டை
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், பறவைகளின் வேட்டையும் அதிகமாகவே பார்க்க முடிகின்றது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் இங்கு Heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று மீனை வேட்டையாடுவதற்காக தண்ணீரில் இறங்கியுள்ளது.
அப்போது மீன் ஒன்றினை தனது அலகால் குத்தி வேட்டையாடியுள்ளது. குறித்த மீனுக்கு காயம் ஏற்பட்டிருந்தாலும் நாரையின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு பயங்கர போராட்டத்தை போராடியுள்ளது.
ஆனாலும் நாரை தனது பிடியை விடாமல் அதனை மிகவும் லாவகமாக உணவாக்கியுள்ளது. மிகவும் துல்லியமாக பதிவாகியுள்ள இக்காட்சியானது எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |