Viral Video: வேட்டையாடிய மீனுடன் ராஜநடை போடும் நாரை! கண்கொள்ளா அழகிய காட்சி
நாரை ஒன்று மீன் ஒன்றினை வேட்டையாடிய பின்பு, ராஜநடை போடும் காட்சி பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
நாரையின் ராஜநடை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
குறித்த மீனை வேட்டையாடிய பின்பு அதனை விழுங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளது. ஆனாலும் தனது விடாமுயற்சியினால் இறுதியில் மீனை லாவகமாக விழுங்கியுள்ளது.
குறித்த காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், மீண்டும் மீண்டும் பார்க்கும் வண்ணமாகவே இருக்கின்றது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |