Viral Video: ராட்சத மீனுடன் ராஜநடை போடும் நாரை! மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி
நாரை ஒன்று பெரிய மீனை தனது அலகினால் கொத்தி உணவாக்கி ராஜநடை போட்டுச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாரையின் வேட்டை
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், பறவைகளின் வேட்டையும் அதிகமாகவே பார்க்க முடிகின்றது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் இங்கு Heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று மீனை வேட்டையாடியுள்ளது.
ஒரே தருணத்தில் தனது அலகால் குறித்த மீனை கொத்தி வேட்டையாடியுள்ளது. மீனை வேட்டையாடிவிட்டு கம்பீரமாக நாரை எழுந்ததும், பின்பு அது ராஜநடை போட்டுச் சென்ற காட்சியும் பிரமிக்க வைத்துள்ளது.
இவ்வாறான காட்சி எத்தனை முறை அவதானித்தாலும், புதிய புதிய காணொளிகள் பார்வையாளர்களை பிரமிப்படையவே வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |