சுகர் லெவல் தாறுமாறாக எகிறிடுச்சா? உடனே இதை மட்டும் சாப்பிடுங்க
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிட்டால் அதனை குறைப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதித்து வருகின்றது.
உடலில் இன்சுலின் சரியாக பயன்படுத்தப்படாத போது ரத்த சர்க்கரை அளவு உயர தொடங்குகின்றது. மேலும் இன்சுலின் சரியாக சுரக்காத நிலையில், ரத்த சர்க்கரை அளவு குறைந்து விடுகின்றது... இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.
ஆரோக்கியமான டயட் மற்றும் வாழ்க்கை முறை இவற்றினால் நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நீரிழிவு நோயாளிகள் சில சத்தான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் உணவுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
பாகற்காய்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் உள்ள கிளைகோசைட் ரத்த சர்க்கரை அளவை கணிசமாக குறைப்பதுடன், நீரிழிவு நோய் வராமலும் தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை ஜுஸாக எடுத்துக் கொள்ளலாம்.
வெந்தயம்
நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் சிறந்த நன்மையை அளிக்கின்றது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் அளவை மேம்படுத்தவும் செய்கின்றது. இரவு ஊற வைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் 15 கிராம் வெந்தய பொடி எடுத்துக் கொள்வதால், உணவிற்கு பின்பு ஏற்படும் ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை குறைக்கின்றது.
Image Credit: kostrez / Shutterstock.com
நாவல்பழம்
பிளாக் பிளம், ஜாவா பிளம், ஜாவா ஃப்ரூட் என பல பெயர்களில் குறிப்பிடப்படும் நாவல்பழங்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நாவல் பழ கொட்டைகளை நன்கு உலர்த்தி பின் அரைத்து எடுத்து கொள்ளலாம். ஆனால் மருத்துவரிடமும் கலந்து ஆலோசித்துக் கொள்ளவும்.
நெல்லி
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய், இன்சுலினை மேம்படுத்தி ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கின்றது. குறிப்பாக காலை நேரங்களில் இதனை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |