நாளை தோன்றும் சிவப்பு நிற சந்திர கிரகணம்... எந்த நேரத்தில் காணலாம்...!
சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது பூமியின் நிழல், சந்திரனின் மீது விழுவதால் சந்திர கிரகண நிகழ்வு ஏற்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் பவுர்ணி நாளான நாளை நிகழவுள்ளது. நாளை நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியாவில் பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் காண முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இது நீண்ட சந்திர கிரகணமாக அமையும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, வட ஆப்ரிக்கா நாடுகள், மேற்கு ஆப்ரிக்க நாடுகள், தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.
மேலும், சந்திர கிரகணத்திற்கு பின்னர் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் போது வளிமண்டல ஒளிச்சிதறல் ஏற்படும். இதன் காரணமாகவே ரத்தச் சிவப்பாக மாறுகிறது.
இதனை ஆங்கிலத்தில் Blood Moon என்று கூறுகின்றனர்.
இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றாலும், தமிழகத்தில் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.