உடம்புல இரத்தம் கம்மியா இருக்கா? இதை மட்டும் சாப்பிடாலே போதும்
உடம்பில் ஹீமோகுளோபின் குறைந்துவிட்டால் அதனை பழங்கள் எவ்வாறு அதிகரிக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஹீமோகுளோபின்
ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களின் காணப்படும் ஒரு புரோட்டீன் ஆகும். இரத்த செல்களின் செயல்பாடு ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதாகும்.
உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், உடல் செயல்பாடுகள் மோசமாக பாதிக்கப்படும். ஒருவருக்கு ஹீமோகுளோபின் பல காரணங்களால் குறையலாம்.
அதில் இரத்த சோகை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை இருந்தால் ஹமோகுளோபின் குறைபாடு ஏற்படும். இதன் விளைவாக ஒருவர் உடல் சோர்வு, பலவீனம், மஞ்சள் காமாலை அல்லது அடிக்கடி தலைவலி ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சில பல வகைகளை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டால் போதுமானது. அந்த பழங்களை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பழங்கள்
இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களைக் கொண்ட மாதுளை ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். தினமும் ஒரு மாதுளையை எடுத்துக்கொண்டால் மாற்றத்தை அறிந்து கொள்ளலாம்.
எந்த மாதத்திலும் விலை மலியாக விடைக்கும் வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாகவெ இருக்கின்றது. தினமும் வாழைப்பழம் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். இரத்த சிவப்பணுக்களை உருவாக்க இன்றியமையாத ஒன்றாகும்.
இதே போன்று தினமும் ஒரு ஆப்பிள் எடுத்துக்கொண்டால் ஹீமோகுளோபின் பிரச்சினை மட்டுமின்றி எந்தவொரு நோயும் உங்களை அணுகாது. ஆகையால் பல்வேறு சத்துக்களை கொண்ட ஆப்பிளை கட்டாயம் எடுத்துக்கொள்ளவும்.
இரும்புச்சத்து எளிதில் உறிஞ்சி, உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த செல்களை அதிகரிக்க வைட்டமின் சி பெரிதும் உதவியாக இருக்கும். ஆகையால் இரும்புச்சத்து உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்களையும் சாப்பிடவும்.
பீச் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளன. எனவே இரும்புச்சத்து குறைபாடு அல்லது உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு பீச் பழத்தை உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், தினமும் காலையில் உட்கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளவும். இவை உடலை வலுவாக்குவதுடன், ஹீமோகுளோபின் உற்பத்தியையும் கொடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |