கோடை காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிப்பது ஏன்?
கோடை காலத்தில் ஏன் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரும் சிரமத்திற்குள் ஆளாகிவிடுகின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, உடம்பில் நீர்ச்சத்து குறைந்து சோர்வாக இருப்பதுடன், சில வியாதிகளையும் கொண்டு வந்து விடுகின்றது.
இதே போன்று கோடை காலத்தில் ரத்த அழுத்தம் உயரவும் செய்கின்றது. இதனை கட்டுப்படுத்த சில யுக்திகளை செல்படுத்துவதும், இதய ஆரோக்கியத்தை பேணுவதும் முக்கியமாகும்.
குளிர்காலத்தில், தமனிகள் மற்றும் ரத்த நாளங்கள் சுருங்குவதைப் போலவே, கோடைக் காலத்திலும் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டுமாம்.
கோடை காலத்தில் ரத்த அழுத்தம் உயர்வது ஏன்?
அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வழிவகுக்கும், இதன் விளைவாக அதிக இரத்த அழுத்தம் ஏற்படலாம்.
வெப்பத்திற்கு உடலின் இயற்கையான பிரதிபலிப்பு இரத்த ஓட்டத்தை அதிகரித்து குளிர்விக்க உதவுகிறது, இது இரத்த அழுத்தத்தை தற்காலிகமாக உயர்த்தும்.
மேலும் உடலில் நீர்ச்சத்து குறையும் போது, ரத்தம் அதிக அளவில் குவிந்து, இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
கோடை காலத்தில் உடற்பயிற்சியிலும், வெளிவேலைகளையிலும் ஈடு படுபவர்களுக்கு இந்த ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் வழக்கமான உடல் செயல்பாடு மேற்கொண்டால் ரத்த அழுத்தம் உயராமல், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
உயர் இரத்த அழுத்தத்தை எப்படி நிர்வகிப்பது?
உடம்பை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். அதாவது போதுமான தண்ணீர், அவ்வப்போது பழ சாறு, இளநீர் இவற்றினை பருகினால் உடல் எப்போதும் நீரோட்டத்துடன் இருக்கும். ஆனால் நீரிழப்புக்கு பங்களிக்கும் சர்க்கரை பானங்கள் மற்றும் ஆல்கஹால் இவற்றினை தவிர்க்கவும்.
இதே போன்று உப்பு உட்கொள்வதிலும் கவனம் வேண்டும். அதிக அளவு உப்பு எடுத்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்து, குளிர்ச்சியான சூழலில் இருப்பதற்கு முயற்சிக்கவும். காட்டன் ஆடைகளை அணிய வேண்டும்.
மன அழுத்தமும் ரத்த அழுத்தம் உயர காரணமாக இருக்கின்றது. சுவாசப்பயிற்சிகள், தியானம், யோகா போன்றவற்றை செய்து வந்தால் மன அழுத்தம் நீங்குவதுடன், ரத்த அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
வெப்பத்தின் தீவிரத்தை குறைப்பதற்கு காலை மற்றும் மாலை குளிர்ச்சியான நேரத்தில் உடற்பயிற்சியினை மேற்கொள்ளலாம். மேலும் இந்த இரண்டு வேலையிலும் குளிக்கவும் செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |