பி.பி, சுகர்னு அத்தனையையும் அடித்து விரட்டி “குட்பை“ சொல்லும் அதிசய பழம்!
ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொருவிதமான குணாதிசயம் இருக்கிறது.
நாவல் பழம் மட்டுமல்ல நாவல் மரத்தின் இலை, பட்டை, வேர் வரை அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.
பொதுவாக சர்க்கரை நோயை மட்டும்தான் நாவல் குணப்படுத்தும் என்ற எண்ணம் மக்களிடம் பரவி உள்ளது.
ஆனால், இத்துடன் பல்வேறு நலன்களை இது தர கூடியது.
மருத்துவப் பயன்கள்
நாவல் மரத்தின் பட்டையும் அதன் வேரும் வயிற்றுப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
இதன் இலையானது குமட்டல், எச்சில் அதிகமாக ஊறுதல், வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வாந்தி போன்றவற்றுக்கு மருந்தாகிறது.
சிறிய வகை நாவல் பழத்தை உட்கொண்டால் சுறுசுறுப்பாக அதிக ஆற்றலோடு பணியாற்ற முடியும்.
தோலில் அதிகமாக எரிச்சல் உள்ளவர்கள் கறுப்பு நாவல் பழம் உண்ணலாம். பெரிய நாவல் பழமானது வயிற்றுப்போக்கு, சர்க்கரை நோய், தோல் எரிச்சல் மூன்றுக்குமே மருந்தாகப் பயன்படுகிறது.
ப்ளாக்பெர்ரியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வரமால் தடுக்கும்.
நலம் தரும் நாவல்
பல்வேறு ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் ப்ளாக்பெர்ரிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்களில் ஒன்றாகும். பல்வேறு நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ப்ளாக்பெர்ரியில் உள்ள சத்துக்கள் இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. மேலும் மென்மையான இரத்த ஓட்டத்தைத் தூண்டவும் உதவும்.
ப்ளாக்பெர்ரியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொல்லும். எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் கே அவசியம்.
ஒரு கோப்பை ப்ளாக்பெர்ரியில் 28.5 மைக்ரோகிராம் வைட்டமின் கே இருப்பதால் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
பிளாக்பெர்ரி பழத்தின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன.
சரும அழகில் அதிசயம் செய்யும் நாவல் பழம்
இரத்தத்தை சுத்தம் செய்வதால் சருமத்தை ஒளிர செய்கிறது. இது வைட்டமின் சி நிறைவாக கொண்டிருப்பதால் சருமத்தை சூரியனின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.
இது ஆஸ்ட்ரிஜெண்ட் பண்புகளை கொண்டிருப்பதால் சருமத்தில் கறைகள், பருக்கள் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றிலிருந்து சருமம் பாதிக்காமல் பாதுகாக்கப்படுகிறது.
நாவல் பழத்தை பயன்படுத்தி செய்யப்படும் ஃபேஸ் பேக் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த செய்யும். வறட்சியான சருமம், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்குவதோடு மெலனின் உற்பத்தியையும் மேம்படுத்துகிறது.
எப்படிச் சாப்பிட வேண்டும்?
நாவல் பழத்தின் மீது சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் போன்றவற்றை தூவிச் சாப்பிடுவது நல்லது.
அதுவே ஒரு நாவல் கொட்டையை சூரணமாக்கியோ, வேர், இலைகளைக் கஷாயம் வைத்தோ சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனையின்றி சாப்பிடக் கூடாது.
நாவல் பழத்தில் இனிப்பும் துவர்ப்பும் கலந்திருக்கும்.
நாவல் விதையில் அதிக துவர்ப்புச் சுவை இருக்கும். இந்தச் சுவையானது உடலில் வாயுவை அதிகப்படுத்தக்கூடியது.