சைவ விரும்பிகளுக்கான கருப்பு உப்பு! 40 வயதை தொடுபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது..
பொதுவாக நாம் பயன்படுத்தும் உப்பை விட இந்திய மக்கள் பயன்படுத்தும் காலா நமக் எனும் பெயர் கொண்ட கருப்பு உப்பு எமது உடலுக்கு நன்மையை தருகிறது.
மேலும் இது கிடைப்பது மிகவும் அரிது என்பதால் இதன் குணங்கள் யாருக்கும் தெரிய வாய்ப்பு குறைவு. இது இமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதியிலிருந்தும் அதிகமாக எடுக்கப்படுகிறது.
இதன்படி இந்த உப்பு வட இந்திய மக்கள் தான் இதனை அதிகம் உணவிற்கு பயன்படுத்துவார்கள். ஏனெனில் இதிலிருக்கும் சோடியத்தின் அளவு நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பிலுள்ள சோடியத்தின் அளவை விட குறைவானதாகவே இருக்கும்.
அந்த வகையில் கருப்பு உப்பின் பயன்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கருப்பு உப்பு உடலுக்கு ஏற்றதா?
பொதுவாக சிலருக்கு வயிற்று பிரச்சினைகள் மூலம் மலச்சிக்கல் ஏற்படும் இவ்வாறு ஏற்படும் போது சிறிதளவு கருப்பு உப்பை நீரில் கரைத்து அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்திவர மலம் வெளியேறி மலச்சிக்கல் நீங்கும்.
கருப்பு உப்பில் முட்டையின் மணம் இருக்கும் மணம் மட்டுமின்றி முட்டையில் இருக்கும் அனைத்து குணங்களும் இருகிறது. இதனால் இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது. மற்றும் சைவ உணவுகள் மாத்திரம் உண்பவருக்கு முட்டையின் ஊட்டச்சத்தை தரும்.
வயது 40 தாண்டும் போது சிலருக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள் எழும் இதன்போது கைப்பிடி அளவு உப்பை எடுத்துக்கொண்டு ஒரு வாணலியில் போட்டு வறுக்கவும் பின்னர் அதை எடுத்து ஒரு துணியில் கட்டி வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.
மேலும் பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் இதனை தினமும் தக்காளி சாறில், கருப்பு உப்பு கலந்து குடித்து வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம். தொடர்ந்து குளிக்கும் போது அந்த நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளித்தால், சருமத்தில் வெடிப்புகள் விழாமல் வழவழப்பாக சருமத்தை தரும்.
சிலருக்கு கால்களில் வெடிப்புக்கள் மற்றும் வீக்கங்கள் இருக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சிறிது கருப்பு உப்பை வெந்நீரில் கலந்து அந்த நீருக்குள் பாதத்தை மூழ்கினாற் போல் வைத்திருந்தால், இது போன்ற பிரச்சினைகள் நீங்கும்.