விடாப்பிடியாக கழுத்தில் இருக்கும் கருமையை போக்கனுமா? இந்த ஒரு பொருளை இப்படி போடுங்க...!
பலருக்கு முகம் ஜொலித்தாலும் கழுத்து கருப்பாக இருக்கும்.
உங்கள் கருமையான கழுத்தை சகஜ நிலைக்கு மாற்ற ஆயுர்வேதம் உதவி புரியும்.
இந்த மூன்று பொருட்களையும் பயன்படுத்தி பலன்களை அனுபவியுங்கள்.
தக்காளி
தக்காளி உங்கள் கழுத்து கருமையை போக்கும். தக்காளி விழுதில் லைகோபீன் நிறைந்துள்ளது, இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
எனவே தினமும் தக்காளி சாற்றை தோலில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவுங்கள்.
நல்ல ஒரு மாற்றத்தினை உணர முடியும்.
தயிர்
தயிர் உங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகின்றது. எனவே கருமையாக இருக்கும் பகுதிகளில் தயிரை பூசி 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவுங்கள். வாரத்தில் 3 தடவை செய்தாலே நல்ல ஒரு மாற்றத்தினை உங்களினால் உணர முடியும்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு சாறு சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. உருளைக்கிழங்கின் சாற்றை கருமையான திட்டுகளில் பூசி காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவுங்கள். உடனே மாற்றத்தினை உணரலாம்.
எச்சரிக்கை
மேலே குறிப்பிட்ட பொருட்களை பயன்படுத்தும் போது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனே நிறுத்தி விடுங்கள். அதேபோல அலர்ஜி இருப்பவர்களும் மருத்துவ ஆலோசனை இல்லாமல் இது போன்ற புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.