கருப்பு பூஞ்சை நோய் எதனால் ஏற்படுகிறது? அறிகுறியும் தடுக்கும் வழிமுறைகளும்;
பூஞ்சை நோய் ஆனது பல காலங்களாக உள்ளது. அதிலும், இந்தக் கருப்பு பூஞ்சை நோய் மண் மற்றும் அழுகிப்போன மரங்கள், இலைகள் போன்றவற்றிலிருந்து உருவாகி மனித உடலில் உள்ள வெட்டுக்காயங்கள், மூக்கு துவாரங்கள் மூலமாக உள்ளே சென்று உடலைத் தாக்குகிறது.
கருப்பு பூஞ்சை நோய், மனித உடல் பகுதியில் ஊடுருவி ஒரு இடத்தை தாக்கி, அதை அழுகும் நிலைக்கு கொண்டுவந்து, கருப்பாக மாற்றிவிடும். இதற்கு தான் கருப்பு பூஞ்சை என்று சொல்லப்படுகிறது.
மேலும், இவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கருப்பு பூஞ்சை நோய் நொடியில் தாக்கிவிடும். அதனால்தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை இழந்தவர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது.

அறிகுறிகள்
இதன் பாதிப்பு நம்முடைய சைனஸில் ஏற்பட்டு, அதிவேகமாகக் கண்களுக்கும் மூளைக்கும் பரவும். பின, முகத்தில் மதமதப்பு, வீக்கம், வலி, கண் சிவத்தல், கண் வலி, கண் வீக்கம்,
திடீர் பார்வைக் குறைபாடு, மூக்கிலிருந்து கருஞ்சிவப்பு நிறத்தில் சீழ் வருதல், மேல் வாயிலோ மூக்கு துவாரங்களிலோ முகத்தின் மீதோ கருப்பு நிறத்தில் கட்டியோ புண்ணோ தெரிதல் போன்றவை இதன் அறிகுறிகள்.
மங்கலான பார்வை சுவாசிப்பதில் சிரமம் நெஞ்சு வலி இரத்தம் கலந்த சளி காய்ச்சல் இருமல் தலைவலி பாதிப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அல்லது குருத்தணு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களிடமும் நுரையீரல் மியூகோமைகோசிஸ் காணப்படும் சாத்தியம் அதிகம்.
கட்டுப்படாத காய்ச்சல், இடைவிடாத கடும் இருமல், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் சளியில் ரத்தம் போன்றவை இதன் அறிகுறிகள்.

யாரை பாதிக்கும்?
சர்க்கரைக் கட்டுப்பாடு குறைவாக உள்ள நீரிழிவு நோயாளிகள்.கொரோனா பாதிப்பினால் இன்சுலின் உற்பத்தியும் அதன் செயலாற்றும் குறைதல்.
காரணமாக திடீரென்று அதிகரிக்கும் சர்க்கரை அளவு. முழுமையான இன்சுலின் குறைபாட்டை பிரதிபலிக்கும் நீரிழிவு கீட்டோ அமிலத்தன்மை (DKA) நிலை. அதிக அளவில் ஸ்டீராய்டு சிகிச்சை பெறுபவர்கள்.

கண்டறியும் முறை
கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டோருக்கு மூக்கு, கண் பகுதியில் (CT - PNS) சிடி-பிஎன்எஸ் ஸ்கேன், அல்லது முகம் முழுவதும் (MRI) எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், கருப்பு பூஞ்சை தொற்று எந்த கட்டத்தில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பூஞ்சை பாதித்தால் என்ன செய்யவேண்டும்? கொரோனாவில் இருந்து குணமடைந்தபின் சத்தான உணவு எடுத்துக்கொள்ளவேண்டும்.
அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் வயல், தோட்டத்தில் பூஞ்சைகள் அதிகம் காணப்படும். வெளியே செல்ல நேர்ந்தால் இரட்டை முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

சிகிச்சைகள்
கருப்பு பூஞ்சை தொற்றுள்ளவர்கள் ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இல்லை என்றால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
இந்த கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முக்கிய மருந்தாக இருப்பது ஆம்ஃபோடெரிசின் பி ஊசி ஆகும். இந்த ஊசி ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்தாகும்.
இந்த தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகள், கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஈ.என்.டி நிபுணர்கள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட வேண்டும்.
ஏனென்றால் இந்த நோய்த்தொற்று உடலின் வெவ்வேறு பகுதிகளை ஒரே நேரத்தில் பாதிக்கிறது. மேலும், உயிர்காக்கும் செயல்முறைகளின் ஒரு பகுதியாக, பூஞ்சையால் பாதிக்கப்பட்ட அனைத்து திசுக்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டும்.
எனவே சிலர் கண் பார்வையை இழக்க நேரிடும். சில சமயங்களில் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 4-6 வாரங்கள் வரை நரம்பு வழி பூஞ்சை எதிர்ப்பு செயல்முறை தேவைப்படலாம்.

செய்யக்கூடாதவை
மூக்கடைப்பு ஏற்பட்டால், அது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக கொரோனாவில் இருந்து மீண்ட பின் மூக்கடைப்பு பிரச்சனையை சந்தித்தால், அப்போது அதை புறக்கணிக்கக்கூடாது.
இந்த தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இறப்பு விகிதம் 80 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. அதுவே சிகிச்சை அளிக்கப்பட்டால், அப்போது அதன் இறப்பு விகிதம் 40-50 சதவீதமாகும்.