கருப்பு பூஞ்சை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தா? இதை செய்தால்... காப்பாற்றிவிடலாம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் வேலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சையால் மக்கள் பாதிப்படையும் செய்தி மேலும் பீதியை கிளப்பியுள்ளது.
இதையடுத்து, கருப்பு பூஞ்சையை பாதித்து வரும் வேலையில் வெள்ளை பூஞ்சையும் ஆபத்தா என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, டெல்லியை சேர்ந்த சுரேஷ் மருத்துவர் விளக்களித்துள்ளார். அதில், பூஞ்சைகளைப் போல வெள்ளைப் பூஞ்சைகள் ஆபத்தானது அல்ல. முன் கூட்டியே கண்டறியப்பட்டால் அதற்கு ஒன்று முதல் ஒன்றரை மாத காலம் வரை சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், உங்கள் மருத்துவரைக் கேட்காமல் கொரோனாவுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இதன்பின்னர், உங்கள் சுற்றுப்புறங்களை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பிரிட்ஜில் வைத்த பழங்கள், காய்கறிகளை உண்ணாமல், எப்பொழுதும் ஃபிரெஷ்ஷான காய்கறி, பழங்களை உண்ணுங்கள் என்றார்.
இந்த வகை பூஞ்சை , நெருக்கடியான இடங்களிலும், ஈரப்பதமான இடங்களிலும் வளருமாம். உங்கள் வீட்டுக்கு சூரிய வெளிச்சம் வரும்படி கதவுகளை திறந்து வையுங்கள். உங்கள் முககவசங்களை தினமும் துவைத்து உபயோகியுங்கள் என்றார்.
ஆனால், பல மருத்துவர்களும் வெள்ளை பூஞ்சை பொய்யானவை அல்லது தவறான புரிந்துகொள்ளப்பட்டவை என்கிறார்கள். இது கண்டிடியாசிஸ் (Candidiasis)எனப்படும் ஒரு வகையான பூஞ்சை தொற்று.
மேலும், இந்த வெள்ளைப் பூஞ்சையானது வழக்கமான கொரோனாவுக்கான அறிகுறிகள் தான் தென்படும். ஆனால் பரிசோதனை மேற்கொண்டால் நெகட்டிவ் என்று வருமாம். எனவே HRCT ஸ்கேன் பரிசோதனை செய்துகொண்டால் அதனை கண்டறியலாம் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.
இதனால், நமக்கு அறிகுறிகள் எதுவும் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.
கொரோனா, கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை ஆகிய எந்த பிரச்சனைகளுக்கும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது என மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.