பாடகி சின்மயிக்கு இவ்வளவு பெரிய குழந்தைகள் இருக்காங்களா? வைரலாகும் புகைப்படங்கள்
பாடகி சின்மயி நீண்ட இடைவெளிக்கு பின்னர் குடும்பத்துடன் அழகிய போட்டோ ஷூட் நடத்தி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
பாடகி சின்மயி
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவரான சின்மயி கன்னத்தில் முத்தம்மிட்டாள் திரைப்படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே... பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.

முதல் பாடலே சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து தமிழில் பாடல் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. சின்மயி பாடகி மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞர்களில் ஒருவரும் ஆவார்.

வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை MeToo மூலம் சின்மயி முன்வைத்தார். அதன் காரணமாக இவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இந்த பிரச்சினையின் பின்னர் தமிழில் டப்பிங் பேசாமல் இருந்து வந்த சின்மயியை, தடைகளை மீறி லியோ படத்தில் திரிஷாவிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டப்பிங் பேச வைத்தார்.இதனால் சில சர்ச்சைகளும் எழுந்தன.

அண்மையில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ பாடலை சின்மயி பாடியிருந்தார்.அது சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகியது.
இந்த குரலையா தடை செய்து வைத்திரு்ககின்றார்கள் என இணையதளவாசிகள் பலரும் தங்களின் ஆதங்கத்தை கொட்டிதீர்த்தனர்.

முத்த மழை பாடலுக்கு பின்னர் சின்மயின் வாழ்க்கையே மாறியது. மீண்டும் பல மேடை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் தன் காதல் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சின்மயி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |