கோரத்தாண்டவத்தை ஆரம்பித்த கருப்பு பூஞ்சை: மக்களை உறைய வைத்த புகைப்படம்
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது தனது இரண்டாவது அலையினை ஆரம்பித்து மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது.
இந்தியாவில் மிக அதிகமாக இரண்டாம் அலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோயும் மக்களை கதிகலங்க வைத்துள்ளது.
தற்போது தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று ஆரம்பித்துள்ள நிலையில், மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.
கருப்பு பூஞ்சை நோய் தொற்று தமிழகத்தில் அதிகரிப்பதற்கு முன்னதாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சியினர் உட்பட பலர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். மேலும், கருப்பு பூஞ்சை நோயை பரவும் நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயினால் ஆறு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த புகைப்படங்கள் வெளியாகி மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி வருவதுடன், குறித்த படத்தினை பார்த்து மக்கள் நோயின் வீரியத்தினை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
கொரோனாவை மக்கள் சாதாரணமாக எண்ணியதாலேயே தற்போது இரண்டாவது அலையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதில் மக்கள் கருப்பு பூஞ்சை நோயிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு கவனமும் இருக்க வேண்டியது அவசியமே...