பித்தப்பை கல்லுக்கு முடிவுக்கட்டும் கருஞ்சீரகம்.. ஆண்கள் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாக கருஞ்சீரகம் பார்க்கப்படுகின்றது.
இதனை அரபு நாடுகளில் அதிகளவில் உணவில் பயன்படுத்துகிறார்கள், ஏனெனின் இது இதயம் சார்ந்த நோய்கள் அதிகமாக வருவதில்லை.
கருஞ்சீரகம் செடி வகையைச் சேர்ந்த மூலிகை என்பதால் அதனை ஆங்கிலத்தில் “பிளாக் குமின்” என அழைக்கப்படுகின்றது.
சுவைப்பதற்கு கசப்புத்தன்மை கொண்ட இந்த கருஞ்சீரக விதைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.
அந்த வகையில் கருஞ்சீரகத்தை வைத்து என்னென்ன நோய்களுக்கு மருந்து செய்யலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
கருஞ்சீரகம்
1. பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு வரும் வலி, சோர்வு போன்றவை நீங்க கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து கொடுக்க வேண்டும். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரக பொடியுடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். இது தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
2. தோல் நோய் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெய்யில் குழப்பி, கரப்பான், சிரங்கு உள்ள இடங்களில் பூசினால் சீக்கிரமாக குணமடைய வாய்ப்பு இருக்கின்றது.
3. கருஞ்சீரக பொடி + தேன் + நீர் கலந்து குடித்தால் மூச்சுமுட்டலுக்கு தீர்வு கிடைக்கும். அத்துடன் குளிர்காலத்தில் பாடாய்படுத்தும் மூக்கடைப்பிற்கு ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை 50 மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடாக்கி, ஆறிய பின் 2 சொட்டு மூக்கில் விட்டால் நிரந்தர தீர்வை பெறலாம்.
4. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுது மற்றும் தேன் சேர்த்து சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை அகற்றி இருமலை கட்டுபடுத்தும்.
5. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர் அல்லது தேன் கலந்து காலை, மாலை என இருவேளையும் பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் படிப்படியாக கரையும்.
6. கருஞ்சீரகம் + நல்லெண்ணெய் இரண்டையும் காய்ச்சி தைலம் பதம் வந்தவுடன் வெற்றிலையில் பூசி சாப்பிட ஆண்மை பெருகும். புது தம்பதிகள் பயன்படுத்தினால் சிறந்த பலனை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |