பசிபிக் கடலில் கிடைத்த மர்ம முட்டைகள் - உள்ளே இருந்தது என்ன?
நம் உலகம் நாம் எண்ணுவதைக் காட்டிலும் மிக வித்தியாசமானதும், மர்மங்களால் நிறைந்ததும் தான். ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் உலகை பற்றிய புரிதலுக்குப் புதிய வாயிலாக அமைக்கிறது.
சமீபத்தில், விஞ்ஞானிகள் கடலின் அடியில் 20,000 அடி ஆழத்தில் ஒரு மர்மமான ஜெட் கருப்பு நிற முட்டைகள் கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பை விட அவற்றுக்குள் இருந்தது தான் அனைவரையும் அதிரவைத்தது.
மர்ம முட்டைகள்
ஜப்பானில் உள்ள டோக்கியோ மற்றும் ஹொக்கைடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ரிமோட் வாகனம் மூலம் பசிபிக் பெருங்கடலில் 6,200 மீட்டர் ஆழத்தில் கருப்பு நிற மர்ம முட்டைகள் கண்டுபிடித்தனர்.
இவை, கடலின் ஆழமான பகுதியில் உள்ள 'அபிசோபெலஜிக் மண்டலத்தில்' காணப்பட்டவை. ஆய்விற்காக மேலே கொண்டு வந்தபோது, பெரும்பாலான முட்டைகள் சேதமடைந்ததால், 4 முட்டைகள் மீட்கப்பட்டன.
இந்த கண்டுபிடிப்பு கடலின் மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
கருப்பு முட்டைகளுக்குள் என்ன இருந்தது?
டோக்கியோ மற்றும் ஹொக்கைடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மர்ம கருப்பு முட்டைகள், முதலில் கடல் உயிரினங்களின் முட்டைகளாக கருதப்பட்டன.
ஆனால், அவை முட்டைகள் அல்ல, தட்டையான புழுக்களின் கூடு என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர். பயாலஜி லெட்டர்ஸ் இதழில் வெளியான ஆய்வின் இணை ஆசிரியர் கெய்ச்சி ககுய், “என் பணியில் இதுபோன்ற புழு கூடுகளைப் பார்த்ததே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
முட்டையை வெட்டியபோது பால் போல் வெள்ளை திரவம் வெளியேறியது உள்ளே சிறிய வெள்ளை உடல்கள் அடர்த்தியாக இருந்தன அவை பிளாட்டிஹெல்மின்த்ஸ் எனப்படும் தட்டையான புழுக்கள் கொண்ட கூடு என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பின் முக்கியதுவம் என்ன?
இந்த கருப்பு முட்டைகளில் இருந்தவை, சாதாரண உயிரினங்கள் அல்ல இவை 6,200 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தட்டையான புழுக்கள் (Flatworms) ஆகும்.
முந்தைய பதிவுகள் 5,200 மீட்டர்தான். இந்த புதிய கண்டுபிடிப்பு, முதுகெலும்பில்லாத உயிரினங்கள் கடலின் மிக ஆழம் வரை வாழ முடியும் என்பதைக் காட்டுகிறது.
இந்த புழுக்கள், Platyhelminthes ஃபைலத்தில் உள்ள புதிய இனங்கள் ஆழமற்ற நீரில் வாழும் புழுக்களுடன் ஒத்த பண்புகள் இருந்தாலும், இவை ஒரு தனிப்பட்ட மரபு அமைப்பைக் கொண்டுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |