உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
நாம் சாப்பிடும் வெங்காயத்தில் இருக்கும் கருப்பு புகை போன்ற கோடுகள் உடலுக்கு ஆபத்தானதா இல்லையா என்பதை பதிவில் பார்க்கலாம்.
வெங்காயத்தின் நன்மைகள்
வெங்காயம் சமையலறையில் ஒரு முக்கியப் பொருளாகும், இது பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அவை சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன.
வெங்காயம் இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது, சருமத்தை மேம்படுத்துகிறது, எடை குறைக்க உதவுகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது, இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இதை நாம் தினமும் சமையலில் சேர்த்து சாப்பிடுவது ஒரு வழக்கமாகவே வைத்துள்ளோம். வெங்காயம் வீட்டில் இல்லை என்றால் சிலர் சமைக்கவே மாட்டார்கள்.
புகை போன்ற கோடுகள்
வெங்காயத்தை உரிக்கும்போது கருப்பு தூசி போன்ற புள்ளிகள் பெரும்பாலும் தோன்றும்.
இவை கைகளில் ஒட்டும் தன்மையுடன் இருக்கும். இவை பாாக்க மண் போல புகை போல இருக்கும். அதாவது மிகவும் மெல்லிய துணிக்கைகளாக இருக்கும்.
உண்மையில் அவை பூஞ்சைகளாகும்.மண்ணிலும் வெங்காயத்திலும் காணப்படும் ஆஸ்பெர்கிலஸ் நைகர் என்ற பூஞ்சையால் இந்த கருப்பு புகை போன்ற கோடுகள் வெங்காயத்தில் வருகின்றன.
இதை சாப்பிடலாமா?
கருப்பு கோடுகள் எல்லாம் Fungal infection ஆக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதை சரிபார்க்க நீங்கள் தண்ணீரில் கழுவி பார்க்க வேண்டும்.
அப்படி கழுவும் போது அந்த கோடுகள் இல்லாமல் போய் வெங்காயம் பொலிவாக இருந்தால் அது நல்ல வெங்காயம். அப்படி இல்லாமல் அதில் கோடுகள் அப்படியே இருந்தால் அது ஆபத்தான வெங்காயம்.
இதை வாங்க கூடாது. காரணம் இதில் Fungal infection இருக்கிறது என அர்த்தம். சரி Fungal infection தானே அது ஒரு பூஞ்ஞை தானே அதை சூடுபடுத்தி சாப்பிட்டால் ஆபத்து இருக்காது அதில் இருக்கும் பூச்ஞைகளை அழித்து விடலாம் என கூறுவீர்கள்.
நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் இந்த பூஞ்சை வெங்காயத்தின் உள்ளிருக்கும் தசையிலும் பரவி இருக்குமானால் அது ஆபத்தானது.
இதை சூடுபடுத்தினால் அழிப்பது கடினம். இது வயதானவர்கள் சிறுவர்கள் மற்றும் நோயில் உள்ளவர்களை அதிகமாக தாக்கும். எனவே வெங்காயத்தை வாங்கும் போது இந்த கருப்பு கோடுகள் உள்ள வெங்காயத்தை வாங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |