நரம்பியல் மண்டலத்தை வலுப்படுத்தும் வல்லாரை கீரை- யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாக கீரைகள் உள்ளன.
இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் தாது உப்புக்கள், கால்சியம் ஆகிய சத்துக்கள் கீரைகள் அதிகமாக இருக்கிறது. இதனால் வாரத்திற்கு மூன்று தடவைகள் மதிய உணவுடன் கீரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
கீரைகளில் ஏகப்பட்ட வகைகள் இருந்தாலும் வல்லாரை கீரை (சென்டெல்லா ஆசியாட்டிகா) சக்தி வாய்ந்த மூலிகையாக பார்க்கப்படுகிறது.
அடிக்கடி சாப்பிடும் பொழுது ஞாபச்சக்தி மேம்படுத்தல், நரம்பு மண்டலம் மேம்படுதல், மன அழுத்தம் குறைவு மற்றும் பதட்டம் குறையும் உள்ளிட்ட பல நன்மைகளை வல்லாரை கீரை கொடுக்கிறது.
வயிற்றுப் புண்கள் அதிகமாக இருப்பவர்கள் வல்லாரை கீரை சுண்டல் செய்து சாப்பிட்டால் குணமாகும். அதே போன்று செரிமான பிரச்சினைகளையும் சரிச் செய்கிறது.
இவ்வளவு ஆரோக்கிய பலன்களை கொடுக்கும் வல்லாரை கீரை றீச்ஷா பண்ணையில் வளர்க்கப்பட்டு, மக்களுக்கு விற்பனை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. எப்படி பயிர் செய்கை செய்யலாம் என்பதை நாம் காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
1. வல்லாரைக் கீரையை அடிக்கடி சாப்பிடும் பொழுது மூளை வளர்ச்சி அதிகமாகும். இதனால் தான் குழந்தைகளுக்கு அதிகமாக இந்த கீரை கொடுக்கிறார்கள்.
2. வலிப்பு நோய் உள்ளவர்கள் வல்லாரை கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக மருந்து வில்லைகள் எடுப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
3. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனைகள் இல்லாமல் வல்லாரை கீரை எடுத்துக் கொள்ளக் கூடாது.
4.வேறு நோய்களுக்கு மருந்து வில்லைகள் மற்றும் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் மருந்துவரிடம் கேட்காமல் கீரை சாப்பிடக் கூடாது. ஏனெனின் மருந்து வில்லைகளின் பலன்களின் இவை தாக்கம் செலுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |