கருப்பு நிறம் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் தெரியுமா?
பொதுவாகவே கருப்பு நிறம் கலாசார ரீதியாக அசுபமானதாகவே கருதப்படுகிள்றது. இந்து சாஸ்திரத்தை பொருத்தவரையில் சுப நிகழ்ச்சிகளில் கருப்பு நிற ஆடைகள் அணிவது தீய விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு கருப்பு நிற ஆடைகள் அதிர்ஷ்டம் கொடுக்கின்றது.இப்படி கருப்பு நிறத்தால் பலனடையும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே கருப்பு நிறத்தின் மீது ஈர்ப்பு இருக்கும். இவர்கள் ஆடை விடயத்தில் மட்டுமல்லாமல் எல்லா பொருட்களிலும் கருப்பு நிறத்தையே அதிகமாக விரும்புவார்கள்.
மற்றவர்களுக்கு கருப்பு நிறம் அசுபமாக கருதப்பட்டாலும் இந்த ராசியினரை பொருத்தவரையில் கருப்பு நிறம் மிகவும் அதிர்ஷ்டம் கொடுக்க கூடிதாகவே இருக்கும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களின் அடையாளமாகவே கருப்பு நிறம் பார்க்கப்படுகின்றது. இவர்களுக்கு கருப்பு நிறம் காரணம் இன்றி மிகவும் பிடித்திருக்கும். கருப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் நல்ல பலன்கள் தேடி வரும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு கருப்பு நிறம் அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும். அவர்களை பொருத்தவரையில் இந்த நிறம் தொழில் ரீதியாகவும் வியாபாரம் ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு கருப்பு நிறம் மிகவும் நெருக்கமானதாக இருக்கும். இவர்கள் இயல்பாகவே எல்லா இடங்களிலும் கருப்பு நிறத்தைப் பயன்படுத்துவதை விரும்புங்கள். கருப்பு நிறம் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |